மேலும் அறிய
Advertisement
தருமபுரி மாவட்டத்தில் கத்திரிக்காய் வரத்து குறைவால், விலை அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
தருமபுரி மாவட்டத்தில் கத்திரிக்காய் வரத்து குறைவால், விலை அதிகரிப்பு-கிலோ ரூ.30-க்கு விற்பனையாவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம், மாரண்டஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் சுமார் 300 ஏக்கரில் கத்திரிக்காய் பயிரிட்டு வருகின்றனர். இங்கு விளையும் கத்திரிக்காய் ஓசூர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கத்திரிக்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தருமபுரி மாவட்டத்திலிருந்து கத்திரிக்காய் வெளியூருக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக உள்ளூர் மார்கெட்டுக்கு வரத்து சரிய தொடங்கியது.
இந்நிலையில் கடந்த மாதம் தொடர் பருவமழை காரணமாக, தருமபுரி மாவட்டத்தில் கத்திரக்காய் விளைச்சல் அதிகரித்து, உள்ளூர் மார்க்கெட்டிற்கு அதிகமாக இருந்தது. இதனையடுத்து கத்திரிக்காய் விலை குறைந்து ரூ.10 வரை விற்பனையானது. ஆனால் தற்போது கத்திரிக்காய் விளைச்சல் அதிகரித்தாலும், வெளியூருக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் கத்திரிக்காய் விலை படிப்படியாக அதிகரித்தது. கடந்த சில வாரங்களுக்கு முன் கிலோ ரூ.20-க்கு விற்பனையான நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்து, கிலோ ரூ.30-முதல் 35-க்கு விற்பனையாகிறது. இந்த நிலையில் வெளி மார்க்கெட்டில் கத்திரிக்காய் ரூ.40 வரை விற்பனையாகிறது. மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் கத்திரிக்காய்க்கு நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
---------------------------------------
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 49வது நினைவு நாளையொட்டி தருமபுரியில் தந்தை பெரியாரின் சிலைக்கு திமுகவினர், அதிமுக, அமமுக, விசிக, திக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பகுத்தறிவு பகலவன் தந்தைபெரியார் அவர்களின் 49வது நினைவு தினத்தையொட்டி தருமபுரி மாவட்ட திமுக சார்பாக, கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்ரமணி தலைமையில், பெரியார் மன்றத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து அதிமுக, அமமுக, விசிக, திராவிடர் கழகத்தை சேர்ந்த தொண்டர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு அரசியல் கட்சினர் மாலை அணிவித்து, வீர வணக்கம் செலுத்தி, மவுன அஞ்சலி செலுத்தினர்.
தருமபுரி அதிமுக மாவட்ட அலுவலகத்தில், எம்ஜிஆா், பொியாா் நினைவு நாளையெட்டி மாலை அணிவித்து மாியாதை.
அதிமுகவின் நிறுவனரும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆாின் 35வது நினைவு நாளையொட்டி, அதிமுக மாவட்ட அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆா் மற்றும் ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினர். தொடர்ந்து கட்சி அலுவலகத்தில், வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருப்பபத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, மவுன அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்நுது தந்தை பெரியாரின் 49-வது நினைவுநாளையொட்டி, பெரியார மன்றத்தில் உள்ள பொியாா் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.சிங்காரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion