மேலும் அறிய
எந்தவித சுணக்கமும் இல்லாமல் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் - தருமபுரி ஆட்சியர்
பருவமழை குறித்த பாதிப்புகள் ஏதேனும் இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 தொடர்பு கொள்ளலாம்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி
தருமபுரி: எந்தவித சுணக்கமும் இல்லாமல் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.
தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி தலைமையில், அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெற்றது. அப்போது, பேசிய மாவட்ட ஆட்சியர் கிஸ்.சாந்தி, தருமபுரி மாவட்டத்தில் இரண்டு வருவாய் கோட்டங்கள், 7 வருவாய் வட்டங்கள், ஒரு நகராட்சி, 10 ஊராட்சி ஒன்றியங்கள், 10 பேரூராட்சிகள், 251 ஊராட்சிகள் உள்ளது.
எதிர்வரும் வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துறை சார்ந்த அலுவலர்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் எவ்வித சுணக்கமும் இருக்கக் கூடாது. மேலும் பொதுமக்கள் பருவமழை குறித்த பாதிப்புகள் ஏதேனும் இருப்பின் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் 24 மணி நேரமும் செயல்படும் பேரிடர் மேலாண்மை முகமையின் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 தொடர்பு கொள்ளலாம்.

வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் பாதிப்பற்ற இடங்களை கண்டறிந்து, சரி செய்யும் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை பாதிக்கும் இடங்களில் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கிம்.சாந்தி அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















