மேலும் அறிய
Advertisement
காவிரியில் நீர்வரத்து குறைந்தவுடன் ஒக்கேனேக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி- தருமபுரி ஆட்சியர்...!
’’தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு சுற்றுலா தளங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது’’
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த வள்ளல் அதியமான் கோட்டம் வளாகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், வருவாய் துறை உள்ளிடட பல்வேறு துறைகளின் சார்பில் 156 பயனாளிகளுக்கு 94.90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த விழாவில் வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, மின்னனு குடும்ப அட்டை, பிரதமர் வீடு, பசுமை வீடுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் திவ்யதர்சினி பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி,
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 7708 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்களில் 4295 தகுதியான நபர்களைத் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. இந்த உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களில் அரசு அலுவலர்கள் நேரில் சென்று உரிய விசாரணை நடத்தி, எந்த ஒரு மனுவையும், தகுதி இல்லை என்று நிராகரிக்காமல் 95% நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் மலை கிராமங்கள் உள்ளிட்ட எல்லா பகுதிகளிலும் வயது முதிர்ந்த ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மருத்துவமனைக்கு வராமலேயே, அவர்களது வீடுகளுக்குச் சென்று மருந்து, மாத்திரைகளை மருத்துவ துறையினர் வழங்கி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட கிராமங்களை உருவாக்க, மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒகேனக்கல் போன்ற அதிக மக்கள் வந்து செல்லும் ஒரு சில பகுதிகளில் 90% கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது அரது மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதால், விரைவில் மாவட்டத்தில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட கிராமம் என்ற இலக்கை அடைவோம்.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு சுற்றுலா தளங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ஒகேனக்கல் பொறுத்தவரை, தற்போது நீர்வரத்து அதிகரித்து வருவதால், பரிசல் இயக்க முடியாமல், சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடியாத நிலையுள்ளது. தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தவுடன், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும். தருமபுரியில் தொழிற்பேட்டை அமைப்பதற்காக 90% நிலம் எடுக்கும் பணிகள் முடிவடைந்து உள்ளது. இதற்கு அரசிடமிருந்து உத்தரவு பெறப்பட்டு தொழில் நிறுவனங்கள் முன் வந்தவுடன் தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என ஆட்சியர் திவ்யதர்சினி தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion