மேலும் அறிய
Advertisement
தென்னை ஓலையில் பாத்ரூம்; பிரதமரின் இலவச வீடு திட்டம் கிடைக்காமல் தவிக்கும் கிராமம் - எங்கு தெரியுமா..?
குளியலறை போன்றவற்றை தற்போது வரை தென்னை ஓலைகள் மற்றும் துணிகளை வைத்து மறைத்து கட்டி அங்கு இருப்பவர்கள் குளியலறையாக பயன்படுத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்ட எல்லையில் காவிரி கரையில் உள்ள கிராமங்களில் பிரதம மந்திரி இலவச வீடு மற்றும் தனிநபர் கழிப்பறை உள்ளிட்ட திட்டங்கள் எதுவும் கிடைக்காமல் கிராம மக்கள் ஏங்கி தவிக்கின்றனர்.
தருமபுரி-சேலம் மாவட்ட எல்லையாக காவிரி ஆற்றின் கரையோரமாக உள்ளது ஏமனூர் கிராமம். மலைகளும் காவிரி ஆறும் சூழ்ந்து, மேட்டூர் அணையின் நீர் தேக்கத்தின் பகுதியில் இதுவும் ஒன்றாகும். இப்பகுதி மக்களின் வருமானம் ஈட்டக்கூடிய தொழிலாக விவசாயம் மற்றும் காவிரி ஆற்றில் மீன் பிடித்தல், ஆடு, மாடு மேய்த்தல் உள்ளிட்டவை இவர்களின் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இப்பகுதி முழுவதும் மூன்று பக்கங்கள் மலைகளாலும் ஒரு பக்கம் காவிரி ஆற்றாலும் சூழப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாததால் மண் சாலையாகவே இருந்தது. அதனையடுத்து தார் சாலை அமைக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஏமனூருக்கு அரசு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டது. நாகமரை ஊராட்சியில் அடங்கியுள்ள ஏமனூர், மேற்கு ஏமனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு இது நாள் வரை மத்திய அரசு அறிவித்துள்ள பிரதம மந்திரியின் இலவச வீடு திட்டம் மற்றும் ஒவ்வொரு வீட்டிற்கும் தனிநபர் கழிப்பறை உள்ளிட்ட திட்டங்கள் எதுவும் இப்பகுதிகளுக்கு இதுநாள் வரை வந்து சேரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் குளியலறை போன்றவற்றை தற்போது வரை தென்னை ஓலைகள் மற்றும் துணிகளை வைத்து மறைத்து கட்டி அங்கு இருப்பவர்கள் குளியலறையாக பயன்படுத்தி வருகின்றனர். பலமுறை இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் புகார் மனுக்கள் கொடுத்தும் இதுநாள் வரை தங்கள் பகுதி கிராம மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் எதுவுமே கிடைக்கவில்லை என்று வேதனையுடனும் ஏக்கத்துடனும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையம் எப்பொழுதும் பூட்டியே இருப்பதாகவும் அவசர தேவைகள் மற்றும் பிரசவம் உள்ளிட்ட சமயங்களில் மருத்துவர்கள் இல்லாததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இங்கு உள்ள நியாய விலைக் கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மிகவும் தரமற்றதாகவும் வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். தாங்கள் அடர்ந்த மலைப் பகுதியை தாண்டி கிராமப் பகுதியில் இருப்பதால் தங்களுக்கான உரிமைகள் சலுகைகள் அத்தியாவசிய திட்டங்கள் முதல் அனைத்துமே கிடைப்பதில்லை என்று வேதனையாக தெரிவிக்கின்றனர். இனியாவது எங்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்களை முழுமையாக எங்கள் கிராம பகுதி மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion