மேலும் அறிய
Advertisement
கொரோனா பரவல் எதிரொலி - தருமபுரி பட்டு கூடு அங்காடிக்கு பட்டுக்கூடு வரத்து சரிவு
’’வெண்பட்டு ஒரு கிலோ அதிகபட்சமாக 701 ரூபாய்க்கும் குறைந்தபட்சமாக 542 ரூபாய்க்கும், சராசரியாக 633 ரூபாய்க்கு ஏலம்’’
தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடி தமிழகத்திலேயே மிகப் பெரிய விற்பனை அங்காடி. தருமபுரி பட்டுக்கூடு அங்காடிக்கு சேலம், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, உடுமலைப்பேட்டை, கோபி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், மயிலாடுதுறை, உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டுக் கூடுகளை விவசாயிகள் விற்பனைக்காக எடுத்து வருகின்றனர்.
இந்த பட்டுக்கூடு அங்காடியில் தினமும் 10 டன் வரை வெண் மற்றும் மஞ்சள் பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல், பொதுமுடக்கம் போன்ற காரணங்களால் வெளி மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடு கொண்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்தது. தற்பொழுது கொரோனா பரவல் மூன்றாம் அலை பரவ தொடங்கியுள்ளதால், வெளி மாவட்ட விவசாயிகளின் வருகை சரியத் தொடங்கியது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு வரும் விவசாயிகளின் வருகை படிப்படியாக குறைந்து வருகிறது. சனிக்கிழமை ஏலத்தில் 19 விவசாயிகள் 862 கிலோ பட்டுக் கூடுகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். நேற்று 4 விவசாயிகள் மட்டுமே 133 கிலோ பட்டுக் கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இதில் வெண்பட்டு ஒரு கிலோ அதிகபட்சமாக 701 ரூபாய்க்கும் குறைந்தபட்சமாக 542 ரூபாய்க்கும், சராசரியாக 633 ரூபாய்க்கு ஏலம் போனது. கொரெனா பரவல் எதிரொலியாக கடந்த சில நாட்களாக வெண் பட்டு கூடுகள் கொண்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாணவி தற்கொலையை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பணிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி விசம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு மாணவியை கட்டாய மத மாற்றம் செய்ய பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியதாகவும், இதனால் மன உளைச்சலில் இருந்த லாவண்யா கடந்த 9ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு, தமிழகம் முழுவதும் இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரே இந்து முன்னனி சார்பில் மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமையில் மாணவி இறந்ததற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கத்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் தமிழக அரசையும், பள்ளி நிர்வாகத்தயும்கோ கண்டித்து இந்து முன்னணியினர் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் இந்து முன்னணி மற்றும் பாஜகவை சேர்ந்த தொண்டர்கள் கையில் பதாகைகளை ஏந்தியும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்னர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மயிலாடுதுறை
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion