மேலும் அறிய
தருமபுரி: கனமழையால் காவிரியில் வினாடிக்கு 18,000 கனஅடியாக நீர்வரத்து உயர்வு
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், காவிரி ஆற்றில் வினாடிக்கு 14,000 கன அடியிலிருந்து 18,000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து, கடந்த ஒரு வாரமாக குறைந்து வந்தது. இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் காவிரி ஆற்றில் தமிழக எல்லைக்கான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 14,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 18,000 கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. மேலும் மழை பொழிவு அதிகரித்தால், நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய நீர் வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
தருமபுரி அரசு பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து சரிந்ததால், விலை அதிகரிப்பு-1096 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.7.32 இலட்சத்திற்கு ஏலம்.
தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர். தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி 5 முதல் 8 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பட்டுக்கூடு வரத்து அதிகரித்து ரூ.20 இலட்சத்திற்கு விற்பனையானது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில், 19 விவசாயிகள் கொண்டு வந்த 1096 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.7.32 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில் குறைந்தபட்சம் ரூ.540 க்கும், அதிகபட்சமாக ரூ.707-க்கும், சராசரியாக 668 ரூபாய் என ஏலம் போனது. மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பட்டுக்கூடு வரத்தும், அதிகரித்து ரூ.20 இலட்சம் விற்பனையானது. ஆனால் நேற்று பட்டுக்கூடு வரத்து குறைந்து 1096 கிலோ வெண் பட்டுக்கூடுகள் 7.32 இலட்சத்திற்கு விற்பனையானது. தருமபுரி பட்டுக்கூடு அங்காடிக்கு வரத்து குறைந்ததால், விலை உயர்ந்து விற்பனையானது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இனிவரும் நாட்களில் பட்டுக்கூடு வரத்து, அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion