H Raja Arrest: ஹெச். ராஜா கைது - கோவையில் பரபரப்பு
பங்களாதேஷில் சிறுபான்மை இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமியர்களை கண்டித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் ஹெச். ராஜா உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது.
பங்களாதேஷின் சிறுபான்மை இந்துக்கள் மீது கடந்த சில தினங்களாக இஸ்லாமியர்கள் தாக்கி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் பசு மாடுகள் உள்ளிட்ட இந்துக்களின் சம்பந்தப்பட்ட அனைத்தையும் இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்துவதற்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பங்களாதேஷில் சிறுபான்மை இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமியர்களை கண்டித்து தமிழக முழுவதும் இந்து ஒருங்கிணைப்பு குழு மற்றும் ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச். ராஜா கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வங்கதேசத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் ஹெச். ராஜா உட்பட 500க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோன்று, சேலம் மாநகர் மரவனேரி பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் எதிரே இஸ்லாமியர்களின் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சிவ காளிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, பாஜக சுற்று சூழல் மாநில தலைவர் கோபிநாத் முன்னணியில் பங்களாதேஷை கண்டித்தும் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமியர்களை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது பெண்கள் பதாகை ஏந்தி கோஷம் எடுக்கும் போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய முற்பட்டனர். இதனால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 177 பேரை கைது செய்தனர். இது குறித்து மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு கூறும்போது, பங்களாதேஷின் சிறுபான்மை இந்துக்களின் மீதும் திருக்கோவில்கள் மீதும் இஸ்லாமியர்கள் கடுமையாக தாக்கி வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இஸ்லாமியர்களை கண்டித்து தமிழகத்தில் இந்துக்கள் போராட்டத்தை திமுக அரசு தடுத்து வருகிறது கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக பங்களாதேஷின் ஏற்படும் கலவரத்தை தடுத்து நிறுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் எஸ்வி வெங்கடாஜலம், ஆர் எஸ் எஸ் மாநில செயலாளர் மகேஷ் குமார், ஆர்எஸ்எஸ் கோட்டத் தலைவர் ராம்ராஜ் உள்ளிட்ட ஆர் எஸ் எஸ் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.