மேலும் அறிய
Advertisement
இங்கு சுங்கச்சாவடி அமைக்க கூடாது - பாப்பிரெட்டிப்பட்டி அருகே பணியை தடுத்து நிறுத்திய அதிமுக எம்எல்ஏக்கள்
சுங்கச்சாவடி அமைப்பதற்கான பணிகளின் போது நிலத்தை கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும்.
சேலம்-வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சுங்கச்சாவடி அமைக்க கூடாது என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வேலையை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வலியுறுத்தல்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டிணம் முதல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வரையிலான நான்கு வழிசாலை பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், ஊத்தங்கரை வழியாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அ.பள்ளிப்பட்டி முதல் திருப்பத்தூர் வரையிலான நான்கு வழி சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த எச்.புதுப்பட்டி அருகே நான்கு வழி சாலையில் சுங்கச்சாவடி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சுங்கச்சாவடி அமைக்கப்பட்டால் உள்ளூர் பகுதியைச் சார்ந்த மக்கள் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் இருந்து வருகிறது. எனவே சுங்கச்சாவடி அமைக்க வேண்டாம் என பொதுமக்கள் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், வே.சம்பத்குமார், ஏ.கோவிந்தசாமி உள்ளிட்டார் சுங்கச்சாவடி அமைக்கப்படுகின்ற இடத்திற்கு நேரடியாக சென்றனர். மேலும், சுங்கச்சாவடி அமைக்கப்பட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே சுங்கச் சாவடியை அமைக்க கூடாது என பணி செய்தவர்களிடம், வேலையை நிறுத்திவிட்டு செல்லுங்கள், யாரும் வேலை செய்யக்கூடாது என தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களை அழைத்து சாலை பணி முடிவு பெற்று இரண்டு ஆண்டுகளாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்பொழுது சுங்கச்சாவடி அமைப்பது முறையானது அல்ல. இந்த சுங்கச் சாவடி அமைப்பதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஒருவேளை சுங்கச்சாவடி அமைப்பதாக இருந்தால் சாலை அமைக்கும் பணியின் போது சுங்க சாவடியையும் அமைத்திருக்கலாம். ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து சுங்கச்சாவடி அமைப்பது முறையானது அல்ல என தெரிவித்தனர். ஆனால் பொறியாளர்கள் சாலை பணி தொடங்கும்போது, இங்கே சுங்கச்சாவடி அமைக்க திட்டம் இருந்தது. அதற்காகத் தான் இங்கே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், இங்கு பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே சுங்கச்சாவடி அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். அதுபோல் சுங்கச்சாவடி அமைப்பதற்கான பணிகளின் போது நிலத்தை கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும். அந்த இழப்பீட்டுத் தொகையை வழங்கிவிட்டு பணிகளை தொடங்க வேண்டும். இந்த நிலையில் மீதமுள்ள நிலங்களை பயன்படுத்துவதற்கு நெடுஞ்சாலை துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என கூறுவது அபத்தமானது. இதனை அரசுக்கு நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் தெரியப்படுத்தி, இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் சுங்கச்சாவடி அமைக்கும் பணியை கைவிடாமல் தொடர்ந்து பணி நடைபெறுமானால் மிகப்பெரிய போராட்டத்தை அதிமுக சார்பில் நடத்துவோம் எனவும் சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion