மேலும் அறிய
Advertisement
ABP நாடு செய்தி எதிரொலி - சுடுகாட்டில் வசித்த இஸ்லாமிய குடும்பத்திற்கு பட்டா வழங்கிய ஆட்சியர்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டாவும், மாதம் தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்குவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி வழங்கினார்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த இம்ரான் தாஜூன் குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக பாப்பிரெட்டிப்பட்டி இஸ்லாமியர்கள் சுடுகாட்டில் வசித்து வருகின்றனர். இந்த சுடுகாட்டில் இஸ்லாமியர்களை அடக்கம் செய்யும் பணிகளை செய்து, அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதில் இளைய மகள் ரஜ்ஜியாவின் கணவன் ரபீக் உயிரிழந்த நிலையில் பெற்றோருடன் வசித்து வருகிறார். மேலும் வீடு பழுதான நிலையில் சிறிய வீட்டிலேயே 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் வசித்து வருகின்றனர்.
இந்த குடுய்பத்தினருக்கு போதி இட வசதியும், வருமானமும் இல்லாமல் தவித்து வந்தனர். இதுகுறித்து நமது ஏபிபி இணைய தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதனை அறிந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இஸ்லாமியர் சுடுகாட்டில் வாழும் குடும்பத்தினரை நேரில் சந்தித்தார். அப்பொழுது இம்ரான் மற்றும் மகள் ரஜ்ஜியாவின் நிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அரசு உதவித் தொகை வழங்குவதற்கும், இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து இன்று ரஜ்ஜியாவிற்கு பாப்பிரெட்டிபட்டி அடுத்த பேதாதாம்பட்டி அருகே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டாவும், மாதம் தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்குவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி வழங்கினார். தொடர்ந்து புதிய தலைமுறையில் செய்தி வெளியான ஒரு வாரத்திற்குள் ரஜ்ஜியாவிற்கு அரசு சார்பில் உதவி கிடைத்தால், மகிழ்ச்சியடைந்த இம்ரான் குடும்பத்தினர், எம்பி செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் மற்றும் ஏபிபி இணையத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.
அரூர் அரசு மருத்துவமனையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் தொடக்கம்
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி உள்ளது. இதற்காக பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தமிழகத்தில் மீண்டும் ‘மஞ்சப்பை’ திட்டம் விழிப்புணர்வு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று தருமபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டினால் நாளுக்கு நாள் பூமி அதிகமான பாதிப்பை சந்தித்து வருகிறது. கடல் வாழ் உயிரினங்கள் உள்பட சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய மாசு ஏற்படுத்துகிறது என்பது குறித்து கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் என அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை மக்கள் கடைப்பிடிக்கவேண்டும் என தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அரூர் பேரூராட்சி தலைவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion