மேலும் அறிய

Mettur Dam : மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 15,000 கன அடி தண்ணீர் திறப்பு.

மேட்டூர் அணையின் நீர் வரத்து 3,672 கன அடியில் இருந்து 2,526 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்து வந்த நிலையில் மீண்டும் குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 4,190 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 3,672 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 2,526 கன அடியாக குறைந்துள்ளது.

Mettur Dam : மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 15,000 கன அடி தண்ணீர் திறப்பு.

அணையின் நீர் மட்டம் 112.78 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 82.42 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 89 வது ஆண்டாக மே 24 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை மே மாதத்தில் திறக்கப்படுவது இதுவே முதல் முறை. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.5 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 15,000 கன அடியாக குறைக்கப்பட்டது. நீர் வெளியேற்றத்தை விட, நீர் வரத்து குறைவாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்காக தண்ணீர் முன்கூட்டியே திறக்கப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்டம் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Mettur Dam : மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 15,000 கன அடி தண்ணீர் திறப்பு.

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 105.46 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 27.40 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,148 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,137 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 42.6 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 7.93 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 363 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs NZ 1st Test:இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்; நியூசிலாந்து ஆல் அவுட்
IND vs NZ 1st Test:இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்; நியூசிலாந்து ஆல் அவுட்
TN Rain Alert: தமிழகமே..! இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Alert: தமிழகமே..! இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை
Breaking News LIVE 18th OCT 2024:  “அனைவரின் முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை” -ஓ.பன்னீர்செல்வம்
Breaking News LIVE 18th OCT 2024: “அனைவரின் முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை” -ஓ.பன்னீர்செல்வம்
 “துரோகம்” தியாகம் பற்றி பேசுவதா?- அதலபாதாளம் சென்ற அதிமுக- ஈபிஎஸ்ஸை மறைமுகமாக சாடிய ஓபிஎஸ்
 “துரோகம்” தியாகம் பற்றி பேசுவதா?- அதலபாதாளம் சென்ற அதிமுக- ஈபிஎஸ்ஸை மறைமுகமாக சாடிய ஓபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Isha Yoga Issue : ”மர்ம மரணம்.. தகன மேடை..காணாமல் போன பக்தர்கள்!” ஈஷா மீது போலீஸ் பகீர்!Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ 1st Test:இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்; நியூசிலாந்து ஆல் அவுட்
IND vs NZ 1st Test:இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்; நியூசிலாந்து ஆல் அவுட்
TN Rain Alert: தமிழகமே..! இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Alert: தமிழகமே..! இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை
Breaking News LIVE 18th OCT 2024:  “அனைவரின் முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை” -ஓ.பன்னீர்செல்வம்
Breaking News LIVE 18th OCT 2024: “அனைவரின் முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை” -ஓ.பன்னீர்செல்வம்
 “துரோகம்” தியாகம் பற்றி பேசுவதா?- அதலபாதாளம் சென்ற அதிமுக- ஈபிஎஸ்ஸை மறைமுகமாக சாடிய ஓபிஎஸ்
 “துரோகம்” தியாகம் பற்றி பேசுவதா?- அதலபாதாளம் சென்ற அதிமுக- ஈபிஎஸ்ஸை மறைமுகமாக சாடிய ஓபிஎஸ்
IPL 2025 Auction:ஐபிஎல் மெகா ஏலம்;லக்னோ அணியிலிருந்து விலகும் கே.எல்.ராகுல்?
IPL 2025 Auction:ஐபிஎல் மெகா ஏலம்;லக்னோ அணியிலிருந்து விலகும் கே.எல்.ராகுல்?
One City One Card : பஸ், ரயில், மெட்ரோ எல்லாத்துக்கும் ஒரே அட்டை.. ஹைடெக்காக மாறும் சென்னை சிட்டி
பஸ், ரயில், மெட்ரோ எல்லாத்துக்கும் ஒரே அட்டை.. ஹைடெக்காக மாறும் சென்னை சிட்டி
"எனக்கு பரீட்சை இருக்கு! நான் வரல" +2 தேர்வுக்காக நியூசி. தொடரில் இருந்து விலகிய இந்திய கிரிக்கெட் பிரபலம்!
Gold Silver Price: 3 நாட்களில் ரூபாய் 1160 உயர்வு! ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை!
Gold Silver Price: 3 நாட்களில் ரூபாய் 1160 உயர்வு! ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை!
Embed widget