மேலும் அறிய

பார்லிமென்டில் மிரட்டப்போகும் கெஜ்ரிவால்? செம்ம ரூட்டா இருக்கே.. ஆனா யாரும் எதிர்பார்க்கல!

Kejriwal: ஆம் ஆத்மி கட்சியின் எம்பி-ஆக உள்ள சஞ்சீவ் அரோராவை, இடைத்தேர்தலில் களம் இறக்கி இருக்கிறார் கெஜ்ரிவால். எனவே, அவருக்கு பதில் தானே மாநிலங்களவைக்கு செல்ல கெஜ்ரிவால் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

Rajya Sabha MP Kejriwal: சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக ஆக அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சஞ்சீவ் அரோராவை, பஞ்சாப் மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் களம் இறக்கி இருக்கிறார் கெஜ்ரிவால். எனவே, சட்டமன்றத்திற்கு சஞ்சீவ் அரோராவை அனுப்பிவிட்டு, தானே மாநிலங்களவை செல்ல கெஜ்ரிவால் பிளான் செய்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. 27 ஆண்டுகளுக்கு பிறகு, தேசிய தலைநகர் டெல்லியை பாஜக கைப்பற்றியது. முதலமைச்சராக பாஜகவின் ரேகா குப்தா பதவியேற்றுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களே தோல்வி அடைந்தனர். இதனால், டெல்லி சட்டமன்றத்திற்கு போக முடியாத அளவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தள்ளப்பட்டுள்ளார்.

சட்டமன்றத்திற்கு போக முடியாத கெஜ்ரிவால், நாடாளுமன்றத்திற்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சஞ்சீவ் அரோராவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் களம் இறக்கியுள்ளது ஆம் ஆத்மி.

கடந்த மாதம் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது,  தற்செயலாக அந்த துப்பாக்கி சூடப்பட்டு அதிலிருந்து வந்த குண்டு குர்பிரீத் கோகியை பதம் பார்த்தது. அதில், அவர் உயிரிழந்தார்.

அவரின் இறப்பை தொடர்ந்து லூதியானா மேற்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில்தான், ஆம் ஆத்மி சார்பில் எம்பி சஞ்சீவ் அரோரா போட்டியிட உள்ளார். ஏற்கனவே, மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதால் அவர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், ஏதேனும் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

எனவே, சஞ்சீவ் அரோராவை எம்எல்ஏ ஆக்கிவிட்டு, தான் நாடாளுமன்ற உறுப்பினராக ஆக கெஜ்ரிவால் பிளான் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவலை ஆம் ஆத்மி மறுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறுகையில், "இதுபோன்ற செய்திகள் முற்றிலும் தவறானவை.  கெஜ்ரிவாலை ஒரு இடத்தில் சுருக்கிவிட விரும்பவில்லை.

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜ்யசபாவுக்குப் போகவில்லை. அரவிந்த் கெஜ்ரிவாலைப் பொறுத்தவரை, அவர் பஞ்சாப் முதல்வராக வருவார் என்று ஊடக வட்டாரங்கள் முன்பு கூறி வந்தன. இப்போது, ​​அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவார் என்று ஊடக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த இரண்டு தகவல்களும் முற்றிலும் தவறானவை. அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர். அவரது தேவை மிக அதிகமாக உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவரை ஒரு இடத்தில் சுருக்கவில்லை" என்றார்.

தலைப்பு செய்திகள்

வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
TN Budget: தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் 20 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம்.. எப்படி தெரியுமா?
TN Budget: தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டில் 20 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம்.. எப்படி தெரியுமா?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
சட்டசபையில நாளைக்கு இருக்கு.! தைரியம் இருந்தால் CM விஜய் பதில் சொல்லட்டும்- சீறிய உதயநிதி
சட்டசபையில நாளைக்கு இருக்கு.! தைரியம் இருந்தால் CM விஜய் பதில் சொல்லட்டும்- சீறிய உதயநிதி

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget