ஆளுநரை ஒருமையில் பேசி மிரட்டும் வகையில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார் - சி.வி.சண்முகம்
மக்களை திசைதிருப்பும் வகையில் ஸ்டாலின் செயல்படுவதோடு மட்டுமல்லாமல் ஆளுநரை ஒருமையில் பேசி மிரட்டும் வகையில் தமிழக முதலமைச்சர் செயல்படுகிறார்- சி.வி. சண்முகம்
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை திசைதிருப்பும் வகையில் செயல்படுவதோடு மட்டுமல்லாமல் ஆளுநரை ஒருமையில் பேசி மிரட்டும் வகையில் செயல்படுவதாகவும் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் எம் ஜி ஆரின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் திமுகவை சார்ந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் என்று கூறுகிறார்கள் எம் ஜி ஆர் இல்லை என்றால் கலைஞர் கருணாநிதியும், ஸ்டாலினும், உதயநிதி யாரும் இல்லை என்றும் சபரீசன், மருமகள் துர்கா தான் திராவிட மாடல் என்று தெரிவித்தார்.
ஆட்சி பொறுப்பேற்று மூன்றாவது பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள ஸ்டாலின் அரசில் எந்த திட்டமும் நிறைவேற்றாமல் மக்களை பற்றி சிந்திக்காத முதல்வராக செயல்படுவதாகவும் திராவிட மாடல் அரசு இரண்டாயிரம் மினி கிளினிக்குகளை மூடி மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தினை கொண்டு வந்துள்ளனர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடி பயனாளிகள் பயனைந்துள்ளதாக தமிழக முதலமைச்சர் கூறுகிறார் ஆனால் சுகாதார துறை அதிகாரி ஒருவரோ ஒரு கோடி மருந்துகள் வினியோகிக்கவில்லை என்று தெரிவிப்பதாகவும் மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
அமைச்சரவையில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத முதல்வராக ஸ்டாலின் செயல்படுவதாகவும் ஆளுநர் ஒப்புதல் இல்லாமைலையே 7.5 சதவிகிதம் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் கல்வி பயில சட்டம் கொண்டு வந்தவர்தான் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டதாகவும் நீட் விவகாரத்தில் மக்களை குழப்பி கொண்டிருக்கிற அரசாக ஸ்டாலின் அரசு செயல்படுவதாக தெரிவித்தார். தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு பட்டப்பகலில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து தமிழ்நாடு போதை நாடாக செயல்படுவதாக குற்றச்சாட்டினார். மக்களை திசைதிருப்பும் வகையில் ஸ்டாலின் செயல்படுவதோடு மட்டுமல்லாமல் ஆளுநரை ஒருமையில் பேசி மிரட்டும் வகையில் தமிழக முதலமைச்சர் செயல்படுவதாகவும், ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்றும் நிர்வாக சீர்கேடு கொண்ட தமிழக அரசாக ஸ்டாலின் அரசு செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்