மேலும் அறிய
Advertisement
”கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக அரசை எதிர்க்கும் திருமாவளவன்” என்ன சொன்னார் தெரியுமா..?
"அரசாங்கமே மது விற்பதால்தான் யார் வேண்டுமானாலும் குடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது”
மதுக்குடித்து இறந்துப்போனவர்களுக்கு இழப்பீடு கொடுப்பதை நியாயப்படுத்த முடியாது
விழுப்புரம் : தமிழக அரசு படிப்படியாக மதுக்கடைகளை மூடவேண்டும். மதுக்கடைகளை திறந்து வைத்துக்கொண்டு, மதுக்குடித்து இறந்துப்போனவர்களுக்கு இழப்பீடு கொடுப்பதை நியாயப்படுத்த முடியாது. அரசு இழப்பீடு கொடுப்பது ஏற்புடையது அல்ல என மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திப்புக்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அரசே ஐஏஎஸ் அதிகாரிகள் மூலம் மதுவை விற்பனை
அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திருமாவளவன்... விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. கள்ளச்சாராய உயிரிழப்புகள் வட மாவட்டங்களில் அடிக்கடி நிகழ்கிறது. மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும். எல்லா ஆட்சி காலத்திலும் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைக்கு அரசே ஐஏஎஸ் அதிகாரிகள் மூலம் மதுவை விற்பனை செய்கிறது. அரசே மதுவை விற்பனை செய்வதால். இன்றைக்கு யாரும் குடிக்கலாம் என்ற நிலை வந்துவிட்டது. தமிழக அரசு படிப்படியாக மதுக்கடைகளை மூடவேண்டும். மதுக்கடைகளை திறந்து வைத்துக்கொண்டு, மதுக்குடித்து இறந்துப்போனவர்களுக்கு இழப்பீடு கொடுப்பதை நியாயப்படுத்த முடியாது. அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுப்பது ஏற்புடையது அல்ல அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய திருமாவளவன்:
கடந்த ஆண்டு மே மாதம் மரக்காணம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு இழப்பீடு வேண்டும் என்பதைவிட மதுக்கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மீன் மாக்கெட் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மரக்காணம் பகுதியில் துறைமுகம் அமைக்க வேண்டும். இதனை சட்டமன்றத்தில் விசிக பேசும். படிப்படியாக மதுக்கடைகளை மூட தமிழக அரசு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசு இதுகுறித்து அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கூட்டணி கணக்குகளை போடவேண்டாம்
நூறு சதவிகிதம் இதில் அரசியல் இல்லை. இதில் கூட்டணி கணக்குகளை போடவேண்டாம். அரசியல் அடிப்படையில் இதனை அனுக வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். திமுக, அதிமுக, இடதுசாரிகள், பாமகவும் என அனைவரும மதுவை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு உள்ளது. அரசியலுக்கு அப்பால் இதனை அணுக வேண்டும் எனவும் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சாதி, மதவாத கட்சிகளோடு இனைந்து செயல்பட முடியாது
சாதி, மதவாத கட்சிகளோடு இணைந்து செயல்பட முடியாது. பாமக, பாஜகவுடன் இனைந்து செயல்பட முடியாத நிலை உள்ளது, இனைந்து செயல்படும் நிலை மறைந்துவிட்டது. தொடந்து, இந்த நிகழ்ச்சியில் விஷ கலாச்சாராயம் குடித்து இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு தங்களினுடைய குறைகளை கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
தமிழ்நாடு
அரசியல்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion