மேலும் அறிய

பாஜகவைப் பின்பற்றி தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை துணை முதலமைச்சராக்க வேண்டும் - வானதி சீனிவாசன்

"சமூக நீதி, சம நீதி, சமத்துவம், ஜனநாயகம், பெண்ணுரிமை பேசும் திமுக அமைச்சரவையில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த முக்கிய துறைகளும் இல்லை"

பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. சத்தீஸ்கரில் பழங்குடியினத்தைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய், மத்தியப்பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மோகன் யாதவ் ஆகியோர் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் பட்டியலினத்தைச் சேர்ந்த பிரேம்சந்த் பைரவா, மத்தியப்பிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் தேவ்தா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக தேர்வாகியுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்கள் அவர்களுக்கு தேவையானதை அவர்களை செய்து கொள்ள அரசியல் அதிகாரம் வழங்குவதுதான் உண்மையான சமூக நீதி. அதைத்தான் பாஜக செய்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 12 பட்டியலினத்தவர், 8 பழங்குடியினர், 27 பிற்படுத்தப்பட்டோர், 11 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 76 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மற்றும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் மத்திய அமைச்சரவை இதுதான். இது மட்டுமல்ல, நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்குப் பிறகு, பட்டியலினத்தைச் சேர்ந்த அர்ஜுன்ராம் மேக்வாலை, மத்திய சட்ட அமைச்சராக்கியிருக்கிறார் பிரதமர் மோடி. இதுதான் சமூக நீதி அரசு.

ஆனால், சமூக நீதி, சம நீதி, சமத்துவம், ஜனநாயகம், பெண்ணுரிமை பேசும் திமுக அமைச்சரவையில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த முக்கிய துறைகளும் இல்லை. 35 பேர் கொண்ட அமைச்சரவையில் இருவர் மட்டுமே பெண்கள். வாரிசு அரசியல், ஊழலில் திளைக்கும் திமுகவுக்கு இனி சமூக நீதி பற்றி பேச எந்த உரிமையும் இல்லை. அமைச்சராக உள்ள மகன் உதயநிதியை, துணை முதலமைச்சராக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. பாஜகவைப் பின்பற்றி தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரையும், பெண் ஒருவரையும் துணை முதலமைச்சராக்க வேண்டும். அவர்களுக்கு உள்துறை, நிதி, பொதுப்பணி, வருவாய், தொழில், உயர் கல்வி, பள்ளிக் கல்வி, சுகாதாரம் போன்ற முக்கியத் துறைகளை ஒதுக்க வேண்டும். இனியாவது வாய்ச் சொல்லில் வீரம் காட்டாமல், சமூக நீதியை செயலில் காட்டுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget