மேலும் அறிய

Exclusive : முதலமைச்சர் மகன் என்பதால்தான் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி தரப்படுகிறது - வானதி சீனிவாசன்

“சமூக நீதி பேசும் திமுக துணை முதலமைச்சராக பட்டியலினத்தை சேர்ந்தவரையும், ஒரு பெண்மணியையும் நியமிக்க வேண்டும்”

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து டாடாபாத் பகுதியில் புதிய பூங்கா அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.  பின்னர் ஏபிபி நாடுவிற்கு வானதி சீனிவாசன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சமூக நீதி பேசும் திமுக துணை முதலமைச்சராக பட்டியலினத்தை சேர்ந்தவரையும், ஒரு பெண்மணியையும் நியமிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் அவர்கள் பேசும் சமூக நீதிக்கு ஒரு அளவாவது நியாயம் செய்வதாக இருக்கும். இல்லை மகனை தான் நியமிப்பேன் என்றால் இது வாரிசு கட்சி என்பதை தவிர வேறு எதுவும் இல்லை. முதலமைச்சர் மகன் என்பதால் குறுகிய காலத்திலேயே பதவி தருகிறார்கள். மற்ற யாருக்கும் தருவதில்லை. அதனால் தான்  திமுகவை வாரிசு கட்சி என்கிறோம். கூட்டணி என்பது தேசிய தலைமையின் முடிவு. அதனால் அந்த முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் குப்பை கொட்டிய இடத்தை பூங்காவாக மாற்ற பூமி பூஜை போட்டுள்ளோம். மாநகர பகுதிகளில் அதிக பூங்கா உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து இயங்கி வருகிறோம். இந்த பூங்காக்கள் மக்கள் உடற்பயிற்சி, விளையாட உதவிகரமாக இருக்கும். கோவை பாஜகவினர் ஜனவரி 22 ம் தேதி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான அழைப்பிதழ் மற்றும் அக்கோயிலில் பூஜிக்கப்பட்ட அட்சதையை வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர். அந்த அட்சதையை மக்கள் ஆர்வமாகவும் பயபக்தியுடன் வாங்கி கொள்கின்றனர். 

Exclusive : முதலமைச்சர் மகன் என்பதால்தான் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி தரப்படுகிறது - வானதி சீனிவாசன்

ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை பெரிய திரையில் திரையிடவும், பஜனை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மக்களிடம் பெரும் மாற்றத்தை பார்க்கிறோம். கலாச்சார அடையாளமான ராமர் பிறந்த இடத்தில் சட்ட பூர்வமாக நியாயமான கோவில் கட்டப்பட்டுள்ளது கோடிக்கணக்கான மக்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது. அயோத்தி செல்ல விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் செல்ல மத்திய அரசு தகுந்த நேரத்தில் அறிவிப்பு வெளியிடும். ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்துள்ளது. ராமர் கோவில் கட்ட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு இருந்தும், அவர்களது சுய லாபத்திற்காக தள்ளி போட்டார்கள். 

இது பாஜக, ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல் என காங்கிரஸ் சொல்கிறது. ஆனால் ராமர் கோவிலை பாஜக, ஆர்எஸ்எஸ் கட்டவில்லை. இது ராமரை வணங்கும் அத்தனை பேருக்கும் பொதுவான கோவில். இந்த கும்பாபிஷேகத்தை காங்கிரஸ் புறக்கணித்து இருப்பது கண்டனத்திற்குரியது. மக்களின் மத உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியின் அறிக்கை மக்கள் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. இதற்காக அக்கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் சில சமய தலைவர்கள் மாற்றுக் கருத்து சொல்வது இயல்பானது. சமய தலைவர்கள் சொல்வதற்கும், இரு கட்சி சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது.

ஸ்ரீ ராமர் கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அரைகுறையாக முடிக்கவில்லை. கோவிலை சுற்றியுள்ள பகுதி கட்டுமானங்கள் இரண்டு ஆண்டுகளில் முடிவடையும். ராகுல் காந்தி நடைபயணத்தால் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. அவருக்கு சிக்கல் இல்லாமல் இருந்தால் சரி. கோவையின் தொழில் வளர்ச்சி என்பது முக்கியமானது. சென்னைக்கு அடுத்து கோவை தான் அதிக வருமானம் தருகிறது. தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பதில் தாமதம், கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளில் தாமதம், மெட்ரோ பணிகள் தாமதம் என கோவையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதை கேட்க பாஜக இருக்கிறது. இதனை கண்டித்து மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். கோவையின் வளர்ச்சி புறக்கணிக்கப்படுகிறடு. ஆண்டுதோறும் அயோத்திக்கு ஒரு இலட்சம் பேர் செல்ல இந்து சமய அறநிலையத் துறை உதவி செய்ய வேண்டும். திராவிட மாடல் அரசு அனைத்து மக்களையும் சமமாக பார்க்க வேண்டும். பெரும்பான்மை மக்களை பிரித்து பார்க்க கூடாது. பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக இருக்க கூடாது” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
Vinfast VF5: டியாகோ, பஞ்ச் மின்சார கார்களுக்கு முடிவுரை? VF5 மாடலை இறக்கும் வின்ஃபாஸ்ட் - ரேஞ்ச், விலை விவரங்கள்
IND Vs NZ ODI: இந்த ஃபர்னீட்சராச்சும் மிஞ்சுமா? இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்றிடாத நியூ., கில் தொடர்வாரா?
IND Vs NZ ODI: இந்த ஃபர்னீட்சராச்சும் மிஞ்சுமா? இந்தியாவில் ஒருநாள் தொடரை வென்றிடாத நியூ., கில் தொடர்வாரா?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Volkswagen: நம்பி மோசம் போயிட்டோம்..! செல்லுபடியாகாத இரண்டு கார்கள்- விற்பனையை நிறுத்திய ஃபோக்ஸ்வாகன்
Embed widget