மேலும் அறிய

“இனியும் பொறுக்க முடியாது”: சசிகலாவிற்காக ஓங்கி ஒலிக்கும் குரல்! விட்டுக்கொடுக்கும் எடப்பாடி?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியாகியது. இதில், தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றிய தி.மு.க., 133 நகராட்சிகளில் வெற்றி பெற்றது. பேரூராட்சிகளிலும் பெருவாரியான வெற்றியை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக, அ.தி.மு.க.வின் கோட்டையாக கருதப்பட்ட கோவையிலும் மோசமான தோல்வியை அ.தி.மு.க. சந்தித்துள்ளது.

அ.தி.மு.க.வின் தலைவர்களான எடப்பாடியிலும், பெரியகுளத்திலுமே தி.மு.க.வே வெற்றிக் கொடியை நாட்டியுள்ளது. இதனால், அ.தி.மு.க.தொண்டர்கள் கடும் அதிருப்தியிலும், ஏமாற்றத்திலும் உள்ளனர். அ.தி.மு.க.வின் இந்த தோல்வி கட்சித் தலைமை வரை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.விற்கு மாற்று சக்தி அ.தி.மு.க.தான் என்று இத்தனை ஆண்டுகளாக நிலவி வந்த மனப்பாங்கையே இந்த தோல்வி மாற்றிவிடுமோ என்று அ.தி.மு.க. நிர்வாகிகளும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

“இனியும் பொறுக்க முடியாது”: சசிகலாவிற்காக ஓங்கி ஒலிக்கும் குரல்! விட்டுக்கொடுக்கும் எடப்பாடி?

இந்த நிலையில், அ.தி.மு.க.வின் ஆலோசகர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் அ.தி.மு.க.விற்குள் மீண்டும் சசிகலாவை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளனர். அ.தி.மு.க.வை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதால் அ.தி.மு.க. தென்தமிழகத்தின் கோட்டையாக விளங்குவதற்கு காரணமாக இருக்கும் முக்குலத்தோரின் வாக்குகளை மீண்டும் பெறலாம் என்றும், மகளிர்கள் மத்தியில் அ.தி.மு.க. இழந்த செல்வாக்கை மீண்டும் பெறலாம் என்றும் நம்புகின்றனர்.

இதுதொடர்பாக, அ.தி.மு.க.வின் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடமும், மூத்த தலைவர்களான செங்கோட்டையன், கே.பி.முனுசாமி மற்றும் கொங்கு மண்டல அ.தி.மு.க. தலைவர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியள்ளது.

“இனியும் பொறுக்க முடியாது”: சசிகலாவிற்காக ஓங்கி ஒலிக்கும் குரல்! விட்டுக்கொடுக்கும் எடப்பாடி?

சசிகலாவிற்கு கட்சியில் ஒரு முக்கியமான பதவியை அளித்து அவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதன் மூலமாக இழந்த செல்வாக்கை மீண்டும் பெறலாம் என்றும், இந்த செல்வாக்கு மூலமாக நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெறலாம் என்றும் நம்புகின்றனர். இதுமட்டுமின்றி, இந்த தேர்தலில் பல இடங்களில் அ.ம.மு.க.வினர் வெற்றி பெற்றுள்ளனர். அ.ம.மு.க.வின் வாக்குகள் அனைத்தும் அ.தி.மு.க.வின் வாக்குகள் என்பதால், சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தால் அந்த வாக்குகளும் அ.ம.மு.க.விற்கு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த உள்ளாட்சித் தேர்தல் தோல்வி அ.தி.மு.க.வின் தலைமை மீது கட்சியின் நிர்வாகிகளுக்கும், கட்சியின் தொண்டர்களுக்கும் இடையே அதிருதிப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Aniruth Arabic Kuthu Dance: விஜய்க்கே டஃப் கொடுப்பாரு போல இருக்கே.. இது அனிருத் அரபிக்குத்து.. வைரலாகும் வீடியோ..!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Water ATM: சென்னையில் குடிநீர் ATM..! கவலையை விடுங்கள் ! துவங்கி வைக்கும் முதல்வர்! எங்கே, எப்படி?
Water ATM: சென்னையில் குடிநீர் ATM..! கவலையை விடுங்கள் ! துவங்கி வைக்கும் முதல்வர்! எங்கே, எப்படி?
Gold Rate 18th June: இப்படி ஏமாத்திட்டியே.?! குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம் - இன்றைய விலை என்ன தெரியுமா.?
இப்படி ஏமாத்திட்டியே.?! குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம் - இன்றைய விலை என்ன தெரியுமா.?
Trump-Asim Munir Meet: அமெரிக்காவின் பித்தலாட்டம்.! ட்ரம்ப்பை சந்திக்கும் பாக். ராணுவ தளபதி-பாகிஸ்தானியர்கள் எதிர்ப்பு
அமெரிக்காவின் பித்தலாட்டம்.! ட்ரம்ப்பை சந்திக்கும் பாக். ராணுவ தளபதி-பாகிஸ்தானியர்கள் எதிர்ப்பு
Trump Threatens Khamenei: “அவர ஈசியா போட்டுத்தள்ள முடியும், ஆனா எனக்கு வேண்டியது அதுக்கும் மேல“; ஈரான் குறித்து ட்ரம்ப் பதிவு
“அவர ஈசியா போட்டுத்தள்ள முடியும், ஆனா எனக்கு வேண்டியது அதுக்கும் மேல“; ஈரான் குறித்து ட்ரம்ப் பதிவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin : ’’அவர் கேட்டால் கொடுப்போம்’’ உதயநிதிக்கு PROMOTION போட்டுடைத்த ஆர்.எஸ்.பாரதிபொய் சொல்லி 2 -வது திருமணம் ரூ.18.5 லட்சம் அபேஸ் ஆட்டையை போட்ட சீரியல் நடிகைIsrael Attack | நேரலையில் செய்தி வாசித்த பெண்.. திடீரென தாக்கிய இஸ்ரேல்! பதற வைக்கும் வீடியோThirupattur | ”வெளிய வா உன்ன...” கத்தியை காட்டி மிரட்டல்!அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Water ATM: சென்னையில் குடிநீர் ATM..! கவலையை விடுங்கள் ! துவங்கி வைக்கும் முதல்வர்! எங்கே, எப்படி?
Water ATM: சென்னையில் குடிநீர் ATM..! கவலையை விடுங்கள் ! துவங்கி வைக்கும் முதல்வர்! எங்கே, எப்படி?
Gold Rate 18th June: இப்படி ஏமாத்திட்டியே.?! குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம் - இன்றைய விலை என்ன தெரியுமா.?
இப்படி ஏமாத்திட்டியே.?! குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம் - இன்றைய விலை என்ன தெரியுமா.?
Trump-Asim Munir Meet: அமெரிக்காவின் பித்தலாட்டம்.! ட்ரம்ப்பை சந்திக்கும் பாக். ராணுவ தளபதி-பாகிஸ்தானியர்கள் எதிர்ப்பு
அமெரிக்காவின் பித்தலாட்டம்.! ட்ரம்ப்பை சந்திக்கும் பாக். ராணுவ தளபதி-பாகிஸ்தானியர்கள் எதிர்ப்பு
Trump Threatens Khamenei: “அவர ஈசியா போட்டுத்தள்ள முடியும், ஆனா எனக்கு வேண்டியது அதுக்கும் மேல“; ஈரான் குறித்து ட்ரம்ப் பதிவு
“அவர ஈசியா போட்டுத்தள்ள முடியும், ஆனா எனக்கு வேண்டியது அதுக்கும் மேல“; ஈரான் குறித்து ட்ரம்ப் பதிவு
IND vs ENG: கம்பீரமும் இல்லை.. கர்ஜனையும் இல்லை! இங்கிலாந்தில் என்ன செய்யப்போகிறது இந்தியா?
IND vs ENG: கம்பீரமும் இல்லை.. கர்ஜனையும் இல்லை! இங்கிலாந்தில் என்ன செய்யப்போகிறது இந்தியா?
பக்தர்களே! திருவண்ணாமலையில் இடது புறம் இருந்து வலதுபுறமாக கிரிவலம் வருவது ஏன்? இதுதான் காரணம்
பக்தர்களே! திருவண்ணாமலையில் இடது புறம் இருந்து வலதுபுறமாக கிரிவலம் வருவது ஏன்? இதுதான் காரணம்
அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை தான்  - ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிவு !
ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை தான் - ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிவு !
Embed widget