![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Amit Shah : “திருமயத்திற்கு வரும் அமித் ஷா” பாதுகாப்பு தரும் கோட்டை பைரவரை தரிசிப்பது ஏன் ? பரபரப்பு தகவல்கள்..!
பயத்தை போக்கி, பாதுகாப்பை தருபவராகவும், வெற்றியை கொடுப்பவராகவும் திகழும் திருமயம் கோட்டை பைரவரை வழிபட்டு, தான் நினைத்தது நடக்க வேண்டும் என வேண்டிக்கொள்ளவே அமித் ஷா திருமயம் வருகிறார்
![Amit Shah : “திருமயத்திற்கு வரும் அமித் ஷா” பாதுகாப்பு தரும் கோட்டை பைரவரை தரிசிப்பது ஏன் ? பரபரப்பு தகவல்கள்..! Union Home Minister Amit Shah's visit to Thirumayam Kottai Bhairavar Temple in Pudukottai district: know the Details Amit Shah : “திருமயத்திற்கு வரும் அமித் ஷா” பாதுகாப்பு தரும் கோட்டை பைரவரை தரிசிப்பது ஏன் ? பரபரப்பு தகவல்கள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/30/223fbc4e0e3fa6accfda51bd475222111717041891472108_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரதமர் நரேந்திரமோடி தியானத்திற்காக இன்று கன்னியாகுமரி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஒரே சமயத்தில் தமிழ்நாடு வருவது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாக பார்க்கப்படுகிறது. இன்றோடு நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நாடு முழுவதும் நிறைவடையவுள்ள நிலையில், ஜூன் 1ஆம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்துக்கொண்டிருக்கும் பாஜக தலைவர்கள் தங்களது பிரச்சாரங்களை முடித்துவிட்டு கோயில்களை நோக்கி சென்று தரிசனத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்து பிரத்யேகமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள கோட்டை பைரவரை வழிபடவுள்ளது அனைவரையும் புதுக்கோட்டை மாவட்டத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
திருமயத்திற்கு வரும் அமித் ஷா ; கோட்டை பைரவரை வழிபடுவது ஏன் ?
வேறு எந்த கட்சி சார்ந்த நிகழ்வுகளோ, சந்திப்புகளோ இல்லாமல் முழுக்க முழுக்க திருமயம் கோட்டையில் வீற்றிருக்கும் கோட்டை பைரவரை தரிசிக்க மட்டுமே அமித் ஷா தமிழகத்திர்கு வருவதற்கு என்ன காரணம் என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கோட்டை பைரவரையும் சத்தியகிரீஸ்வரர் என்ற பெயரில் எழுந்திருக்கும் சிவனையும் தரிசிக்க அவர் திருமயம் வருகிறார்.
தமிழ்நாட்டில் தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் உள்ளிட்ட பெரிய பிரபலமான கோயில்களுக்கு சென்று வழிபடுவதையே அரசியல் கட்சி தலைவர்கள் வாடிக்கையாக வைத்திருக்கும் நிலையில், திருமயம் கோட்டையில் உள்ள பைரவர் கோயிலை அமித் ஷா நாடி வந்து வழிபட இருப்பது ஏன் என தமிழக அரசியல்வாதிகளே வியப்பில் ஆழ்ந்திருக்கின்றனர்.
பாதுகாப்பு தரும் பைரவர் ; நினைத்ததை நடக்க வைப்பார்
உள்ளூர எழும் பயத்தை போக்கி, பாதுகாப்பை தரும் பலம் கொண்டவராகவும், தன்னை வழிபடுபவருக்கு வெற்றியை தருபவராகவும் திகழும் திருமயம் கோட்டை பைரவரை வழிபட்டு, தான் நினைத்தது நடக்க வேண்டும், தேர்தலில் வெற்றி கிடைக்க வேண்டும் என வேண்டிக்கொள்ளவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருமயம் வருகிறார். காலத்தை நிறுத்தவும், நீட்டிக்கவும், பின்நோக்கி செலுத்தவும் முடியும் சக்தி உள்ளவராக உள்ள கால பைரவராகவும் கோட்டை பைரவர் இருப்பதால் அவரை அமித் ஷா வழிபட வந்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது
கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், கடவுளை நினைக்கும் அமித் ஷா
கடந்த ஏப்ரலில் பீகாரில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அமித் ஷா ஹெலிகாப்டரில் புறப்படவிருந்த நிலையில், அந்த ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அமித் ஷா, கோட்டை பைரவை பற்றி தமிழக பாஜக தலைவர்கள் மூலம் கேள்விபட்டு அவரை வழிபட வருகிறார்.
எந்த வாகனத்தில் பயணம் செய்தாலும் எந்த பிரச்னையும் இல்லாமல் பயணம் நல்லபடியாக முடிய வரம் கொடுப்பவராக இருப்பவராக திருமயம் கோட்டை பைரவர். பலரும் தங்களது பயணத்திற்கு முன்னர் இங்கு வந்து சிதறு தேங்காய் உடைத்து வழிபட்ட பின்னரே நீண்ட பயணங்களை துவக்குவதை வழக்கமாக வைத்துள்ளர். அப்படி கோட்டை பைரவரை வழிபட்டு சென்றால், பயணங்களின்போது விபத்தோ அல்லது எந்த விரும்பத்தகாத நிகழ்வோ நடைபெறாமல் வணங்கியவருடனே பாதுகாப்பாய் பைரவர் வருவார் என்பது நம்பிக்கை. அதனடிப்படையிலேயே கோட்டை பைரவரை வணங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வருகிறார்.
ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் கிழவன் சேதுபதியால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த திருமயம் கோட்டை கோயிலில் அமித் ஷா வழிபட இருப்பது பலரையும் இந்த நிகழ்வை உற்றுநோக்க வைத்திருக்கிறது.
அமித் ஷா பயணத் திட்டம்
நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சத்தியகிரீஸ்வரர் ஆலயம் மற்றும் கோட்டை பைரவர் ஆலயங்களில் சிறப்பு தரிசனம் மேற்கொள்ள உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து இன்று நண்பகல் 12:20 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு, பிற்பகல் 3.05 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடையும் அமித் ஷா, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் 3.10 மணிக்கு சிவகங்கை செல்கிறார் . அங்கிருந்து 3:45 மணிக்கு சாலை மார்க்கமாக காரில் புறப்படும் அவர் மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அமைந்துள்ள சத்தியகிரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று தரிசனம் செல்கிறார்.
பின்னர் அங்கு அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜராஜேஸ்வரி உடனுறை சத்தியகிரீஸ்வரர் மற்றும் கோட்டை பைரவர் ஆலயங்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டில் ஈடுபடுகிறார். அதன்பிறகு, மாலை 4:40 மணிக்கு சாலை மார்க்கமாக சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானுக்கு புறப்படும் அவர் 4.50 மணிக்கு அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் 4.55 மணிக்கு புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து 5.20 மணிக்கு தனி விமான மூலம் ஆந்திரா செல்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)