மேலும் அறிய

Chembarambakkam Lake: திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ! கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

Chembarambakkam Lake Water Level: செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி இருந்து வருகிறது. சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ளது . சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமழை பெய்யும்போதெல்லாம், செம்பரம்பாக்கம் ஏரி மிக முக்கிய பேசுபொருளாக மாறிவிடும். இதற்கு முக்கிய காரணம் ஏரியிலிருந்து வெளியேறும் நீர், செல்லும் பாதை தான் காரணமாக உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி Chembarambakkam Lake 

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர் திருநீர்மலை, குன்றத்தூர், நத்தம், திருமுடிவாக்கம், சிறுகளத்தூர் மணப்பாக்கம் வழியாக பயணித்து, ராமாபுரம், நந்தம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக பயணித்து அடையாறு முகத்துவாரம் சென்றடைகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிகளவு நீர் வெளியேறினால், மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் இருக்கிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றப்படும் போது, பல்வேறு குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் புகும் அபாயம் உள்ளது. எனவே செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு என்பது அதிகாரிகளுக்கு சவாலான ஒன்றாக உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?

செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 141 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 23.29 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும் தற்பொழுது தண்ணீரின் அளவு 3.453 டிஎம்சி ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 6498 கன அடியாக உள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியில் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காக 134 கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் அறிவிப்பு என்ன ?

இதுகுறித்து நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் எரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துர் வட்டத்தில் அமைந்துள்ளது. எரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழுக்கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். இன்று (13:122024) காலை 06.00 மணி நிலவரப்படி நீர் இருப்பு 23.29 அடியாகவும், கொள்ளளவு 3453 மில்லியன் கன அடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 6498 கன அடியாகவும் உள்ளது. ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அடையாற்றின் வெள்ள தணிப்புக்காக (Flood Moderation in Adayar River) எரியிலிருந்து இன்று 13:122024 காலை 08.00 மணியளவில் வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. எரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.

எனவே, எரியிலிருந்து நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர் காவனுர் குன்றத்துர், திருமுடிவாக்கம் வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
ABP Premium

வீடியோ

”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
Putin Warns Ukraine: “அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
“அமைதித் திட்டத்த ஏத்துக்கோங்க, இல்லைன்னா...“; உக்ரைனுக்கு புதின் விடுத்த எச்சரிக்கை என்ன.?
TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
TVK Vijay: தவெகவுக்கு வரும் முக்கிய அரசியல் தலைவர்கள்.. ஈரோட்டில் விஜய் கொடுத்த அப்டேட்!
Maruti eVitara: மாருதி சுசூகியின் முதல் மின்சார வாகனத்தில் என்ன இருக்கிறது.? இ விதாராவின் அம்சங்கள் விரிவாக..
மாருதி சுசூகியின் முதல் மின்சார வாகனத்தில் என்ன இருக்கிறது.? இ விதாராவின் அம்சங்கள் விரிவாக..
Indian Cars Export Record: வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் இந்திய கார்கள்; சாதனையை நோக்கி நடைபோடும் ஏற்றுமதி
வெளிநாடுகளில் பட்டையை கிளப்பும் இந்திய கார்கள்; சாதனையை நோக்கி நடைபோடும் ஏற்றுமதி
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - வெளியான முக்கிய அறிவிப்பு
உஷார்... ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்.! 22ஆம் தேதி முதல் செக் - சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
Embed widget