மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 2 வழக்குகள் பதிவு..
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
![முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 2 வழக்குகள் பதிவு.. Two cases have been registered against former minister Rajendra Balaji முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 2 வழக்குகள் பதிவு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/18/5ade24f26ba7028f59915253728a3599_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முன்னாள்_அமைச்சர்_ராஜேந்திர_பாலாஜி
சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் அ.தி.மு.கவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட அ.தி.மு.க முன்னாள் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி என்பவர் மீது ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 30 லட்சம் மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
முன்னாள் அமைச்சர் கே.டி.
— Arunchinna (@iamarunchinna) November 18, 2021
ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு.#abpnadu
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க., ஒன்றிய நிர்வாகி விஜயநல்லதம்பி. ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளார். இவரிடம் சாத்துார் புறவழிச்சாலையில் கடை நடத்திவரும் ரவீந்திரன் தனது உறவினருக்கு வேலை பெற பல தவணைகளில் ரூ.30 லட்சம் கொடுத்துள்ளார். வேலை கிடைக்கவில்லை. எனவே ஆட்சி மாறியவுடன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
![முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 2 வழக்குகள் பதிவு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/18/9dfa85360cebe60893b2777b7b24e6ed_original.jpeg)
பணத்தை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்துவிட்ட தாகவும், அவர் தந்தவுடன் தருவதாகவும் விஜயநல்லதம்பி கூறி உள்ளார். இந்நி லையில் விஜயநல்லதம்பி, ராஜேந்திரபாலாஜி மீதும் ரவீந்திரன் காவல்துறையினரிடம் புகார் செய்தார். ரூ.3 கோடியை வாங்கி திருப்பித்தர மறுப்பதாக ராஜேந்திர பாலாஜி மீது விஜயநல்லதம்பி, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
![முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 2 வழக்குகள் பதிவு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/18/acf1607c9fc18b35e29c625c443a3304_original.jpeg)
இந்நிலையில் ரவீந்திரன் கொடுத்த புகாரில் விஜயநல்லதம்பி, ராஜேந்திரபாலாஜி, மாரியப்பன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயநல்ல தம்பி கொடுத்த புகாரில் ராஜேந்திர பாலாஜி, முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி கே.டி.ராஜேந்திர பாலாஜி மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இது பொய் வழக்கு எனவே இந்த வழக்கில் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion