TVK Conference: தவெக மாநாட்டின் ஏற்பாடுகள்: சூசகமாக விஜய் உணர்த்திய 2 விஷயங்கள்
TVK Vijay Conference: தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் உள்ள ஏற்பாடுகள் மற்றும் கட் அவுட்டுகளில் இருந்து கட்சி குறித்தான 2 விஷயங்கள் வெளிப்படுவதை பார்க்க முடிகிறது.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் முதல் மாநாடானது, வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் அரசியல் மாநாடு:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடானது, விக்கிரவாண்டியில், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் 85 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் தீவிரமாக கண்காணித்து வருகிறார்.
ஏற்பாடுகள்:
மாநாட்டிற்கு வருபவர்கள் அனைவருக்கும் தேவையான கழிப்பிட வசதி, இருக்கைகளுக்கு அருகே தேவையான அளவுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மாநாட்டு திடல் மற்றும் பார்க்கிங் பகுதியில் அவசர மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள். மேலும் மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ் குழுவினர், கண்காணிப்பு குழுவினர், வரவேற்பு குழுவினர் என அனைவருக்கும் தனித் தனியாக ஒரே நிற சீருடை வழங்கப்பட இருக்கிறது.
சூசமாக விஜய் உணர்த்தும் 2 விசயங்கள்:
1. மாநாட்டின் நுழைவு வாயிலானது, கோட்டையின் மதில் சுவர் வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் இரண்டு யானைகள் இருபுறமும் பிளிரும் வகையில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், த.வெ.க யானை சின்னத்தை பயன்படுத்துவதை பகுஜன் சமாஜ் கட்சியானது எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், யானை சின்னத்தை பயன்படுத்த கூடாது என்றும் இல்லையென்றால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், மாநாட்டின் நுழைவு வாயிலிலேயே இரண்டு யானைகள் வடிவிலானவற்றை பயன்படுத்தியிருப்பது மூலம், யானை சின்னததை நீக்க முடியாது என்றும் , அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம் என்பதையும் தவெக இருப்பதை பார்க்க முடிகிறது.
2. இரண்டாவதாக , மாநாட்டின் ஏற்பாட்டில் சுமார் 50 அடி உயரத்தில் விஜய் மற்றும் 3 தலைவர்களின் கட் அவுட்டுகள் இருப்பதை பார்க்க முடிகிறது. அதில் காமராசர், பெரியார், அம்பேத்கர் மற்றும் விஜய் கட் அவுட்டுகள் இருக்கின்றன. பெரியார் கட் அவுட் வைத்ததை பார்க்கும் போது, திராவிட கொள்கையையும் த.வெ.க கட்சியின் முக்கிய கொள்கையாக இருப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்க முடிகிறது.
இருப்பினும், த.வெ.க கட்சியின் நிலைப்பாடு, அதன் கொள்கை மற்றும் அது பயணிக்கும் பாதையானது அதிகாரப்பூர்வமாக வரும் 27 ஆம் தேதியின் முதல் மாநாட்டிலே தெரியவரும்.