Sengottaiyan: விஜய் காலில் விழுந்தாரா செங்கோட்டையன்? பரபரப்பு தகவல்! உண்மை என்ன?
"சென்னை பனையூரில் இன்று தமிழக வெற்றி கழகத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார்"

"விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக கட்சியில், அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து வந்த செங்கோட்டையன் இணைந்தார்".
தமிழக வெற்றி கழகம்
தமிழகத்தின் முன்னணி நடிகர் விஜய் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார். விஜய் கட்சியை தொடங்கிய போது தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த, மூத்த தலைவர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கட்சி துவங்கியதிலிருந்து பெரிய அளவில், பிற கட்சி நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணையாமல் இருந்து வந்தனர்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் செங்கோட்டையன், எம்ஜிஆர்க்கு பிறகு கட்சி இரண்டாக உடைந்த போது, ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தவர். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த அனைத்து காலகட்டங்களிலும் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை, வனத்துறை, வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம் என முக்கிய பதவிகள் கொடுக்கப்படது. ஜெயலலிதா தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு பல்வேறு வகையில் உறுதுணையாக இருந்து வந்தவர்.
அதிமுக இணைப்பு
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக செங்கோட்டையன் பிரிந்த தலைவர்கள் எல்லாம் அதிமுகவில் ஒன்றிணைைய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பையும் செங்கோட்டையின் நடத்தியதிலிருந்து, அவரது கட்சி பதவிகள் பிடுங்கப்பட்டது. அதன் பிறகு டிடிவி தினகரன், ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோரை சந்தித்த பிறகு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
தமிழக வெற்றி கழகத்தில் செங்கோட்டையன்
அதிமுகவில் செங்கோட்டையன் நீக்கப்பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். இதனால் செங்கோட்டையின் அடுத்து என்ன செய்ய இருக்கிறார் என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழத் தொடங்கியது. அதிமுகவை இணைக்கும் பணியில் ஈடுபடுவாரா? திமுக அல்லது பாஜகவில் இணைவாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில் யாரும் எதிர்பாக்காத வகையில், செங்கோட்டையன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவி ராஜினாமா செய்தார். அதன் பிறகு இன்று விஜய் முன்னணியில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் கட்சியிலே இணைந்தார்.
விஜய் காலில் விழுந்த செங்கோட்டையன் ?
இந்தநிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் வெளியேற்றப்பட்டு, செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் விஜய் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைகள் ஈடுபட்டபோது ஒரு சில செங்கோட்டையன் ஆதரவாளர்கள் விஜய் காலில் விழுந்ததாக தகவல் வெளியானது. செங்கோட்டையினும் விஜய் காலில் விழுந்ததாக சமூக வலைத்தளத்தில் ஒரு சிலர் பதிவு செய்து வந்தனர்.
இதுகுறித்து கட்சி வட்டாரங்களில் தொடர்பு கொண்டு விசாரித்த போது: செங்கோட்டையன் கட்சியில் இணைந்தவுடன் அவருக்கு உறுப்பினர் அட்டை கொடுக்கப்பட்டது. எப்போதுமே ஜெயலலிதாவின் புகைப்படத்தை செங்கோட்டையன், பாக்கெட்டில் வைத்திருப்பார். தற்போது விஜய் படம் பொறித்த உறுப்பினர் அட்டையும் பாக்கெட்டில் வைத்தார்.
தனியாக நடைபெற்ற கூட்டத்தில் விஜய் காலில் ஒரு சில நிர்வாகிகள் விழுந்தனர். ஆனால் செங்கோட்டையின் விஜய் காலில் விழவில்லை. மூத்த தலைவரான செங்கோட்டையனை விஜய், அண்ணன் என்றே அழைத்தார். எனவே ஒரு சிலர் திட்டமிட்டு இந்த தகவலை பொய்யாக பரப்பி வருவதாக தெரிவித்தனர்.






















