மேலும் அறிய

TVK Vijay: புஸ்ஸி ஆனந்தை வெளியே அனுப்பிய விஜய்.! தனியாக தவெக நிர்வாகிகளுடன் விஜய் பேசியது என்ன?

TVK Vijay: தவெக தலைவர் விஜய் நேரடியாக நிர்வாகிகளை சந்திப்பது இல்லை, புஸ்ஸி ஆனந்துதான் சந்திக்கிறார் என்ற விமர்சனம் எழுந்து வந்த நிலையில், நிர்வாகிகளிடம் தனியாக ஆலோசனை நடத்தியிருக்கிறார், விஜய்.

தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்ட ரீதியாக நிர்வாகிகளை நியமித்து , கட்சியை வலுப்படுத்தி வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தீவிரமாக வேலை செய்ய வேண்டும் என்ற வகையில், அதற்காக நிர்வாகிகளை நியமிப்பதற்காக தனித்தனியாக சந்தித்து நேர்காணல் செய்தும், ஆலோசனையிலும் ஈடுபட்டார், தவெக தலைவர் விஜய். இதையடுத்து, முதற்கட்டமாக 19 மாவட்டத்திற்கான நிர்வாகிகளை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் விஜய்.

நேரில் களமிறங்கும் விஜய்:

தமிழக வெற்றிக கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை நோக்கி தீவிரமாக செயல்பட ஆரம்பித்துள்ளது. கடந்த வாரம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு உள்ள மக்களுக்கு ஆதரவாக, களத்திற்கே சென்று மக்களிடம் நேரில் உரையாற்றினார், விஜய். இதையடுத்து, வேங்கைவயல் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியது.  

ஆனால், தவெக கட்சியில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட சில பொறுப்புகள் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில் இறங்கியுள்ளார், விஜய்.

Also Read: TVK District Secretary: வெள்ளி நாணயம் கொடுத்த விஜய்.! 120 தவெக மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

புஸ்ஸி ஆனந்த் இல்லாமல் ஆலோசனை:

இந்நிலையில், மாவட்ட நிர்வாகிகளை நியமிக்கும் வகையில், இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில், பனையூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய பொறுப்பு வகிப்பவர்களை வெளியே அனுப்பிவிட்டு, மாவட்ட நிர்வாகிகளுடன், தனித்தனியாக ஆலோசனை நடத்தியிருக்கிறார், விஜய். ஒவ்வொரு நிர்வாகிகளிடம்,  சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை ஆலோசனை நடத்தியிருக்கிறார். 

மாவட்ட நிர்வாகிகளிடம், கட்சியை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள், கட்சியின் செயல்பாடு எப்படி இருக்கிறது, எப்படி செயல்பட வேண்டும், கட்சியை வலுப்படுத்த, உங்களிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பது குறித்த ஆலோசனைகளை, மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியதாக தகவல் தெரிவிக்கின்றன. 

Also Read: PM Modi-Trump Inauguration: சீனாவுக்கு அழைப்பு; மோடிக்கு இல்லை.! நண்பரை, டிரம்ப் அழைக்காதது ஏன்?

விமர்சனங்கள்:

தவெக தலைவர் விஜய், மாவட்ட நிர்வாகிகள், மக்களை மற்றும் செய்தியாளர்களை சந்திப்பது கிடையாது, எந்த ஒரு நிகழ்வு என்றாலும் சமூக வலை தளத்தில் தெரிவிக்கிறார், அறிக்கை வெளியிடுகிறார் என வொர்க் ஃப்ரம் ஹோம் அரசியலை செய்து வருகிறார் என்றும், நேரடியாக சந்திப்பதாக இருந்தால், அதை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துதான் மேற்கொள்கிறார் என்றும், புஸ்ஸி ஆனந்த், தற்போது தவெக கட்சியின் முகமாகவே மாறி வருகிறார் என்றும், இது விஜய்-ன் அரசியலுக்கு நல்லது இல்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். 

மேலும், சில தினங்களுக்கு முன்பு கூட, சாதி மற்றும் பணம் ஆதிகத்துடன் இருப்பவர்களுக்கு மட்டுமே, தமிழக வெற்றி கழகம் கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படுவதாக கட்சி நிர்வாகிகள், தங்களின் ஆதங்கத்தை ஆடியோ வெளியாகியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், ஒவ்வொரு பதவிக்கும் பல லட்சங்கள் நிர்ணயம் செய்து, வசூல் செய்யும் பணியில் மூத்த நிர்வாகிகள் கைவரிசையை காண்பிக்க ஆரம்பித்துள்ளதாகவும், தவெக கட்சியில் அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

TVK Vijay: புஸ்ஸி ஆனந்தை வெளியே அனுப்பிய விஜய்.! தனியாக தவெக நிர்வாகிகளுடன் விஜய் பேசியது என்ன?

இந்நிலையில், பொதுச் செயலாளர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இல்லாமல், தனியாக மாவட்ட நிர்வாகிகளை முதல்முறையாக தனித்தனியாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்நிலையில், முதற்கட்டமாக 19 மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்தும், நிர்வாகிகளுக்கு விஜய் உருவம் பொறித்த வெள்ளி நாணயமும் வழங்கப்பட்டிருக்கிறது.  இந்நிலையில், இந்த மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு மூலம், கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் இறுதி முடிவுகள், தன்னிடம்தான் இருக்கிறது என்பதை விஜய் உணர்த்துவதாக பார்க்கமுடிகிறது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Trump Offers Canada: இதுக்கு ஒத்துக்கிட்டா அது Free; குசும்புக்கார ட்ரம்ப் கனடாவிற்கு கொடுத்திருக்கும் Offer என்ன தெரியுமா.?
இதுக்கு ஒத்துக்கிட்டா அது Free; குசும்புக்கார ட்ரம்ப் கனடாவிற்கு கொடுத்திருக்கும் Offer என்ன தெரியுமா.?
Kamal Haasan: அடடா..! தக் லைஃப் செய்ய போய், பிரச்னையில் சிக்கிய கமல் - என்ன பேசியிருக்காரு தெரியுமா?
Kamal Haasan: அடடா..! தக் லைஃப் செய்ய போய், பிரச்னையில் சிக்கிய கமல் - என்ன பேசியிருக்காரு தெரியுமா?
IPL 2025 Playoff: குவாலிஃபையரில் PBKS Vs RCB, எலிமினேட்டரில் GT Vs MI - எங்கு, எப்போது? ஜிதேஷ் ருத்ரதாண்டவம்
IPL 2025 Playoff: குவாலிஃபையரில் PBKS Vs RCB, எலிமினேட்டரில் GT Vs MI - எங்கு, எப்போது? ஜிதேஷ் ருத்ரதாண்டவம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aarti

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Trump Offers Canada: இதுக்கு ஒத்துக்கிட்டா அது Free; குசும்புக்கார ட்ரம்ப் கனடாவிற்கு கொடுத்திருக்கும் Offer என்ன தெரியுமா.?
இதுக்கு ஒத்துக்கிட்டா அது Free; குசும்புக்கார ட்ரம்ப் கனடாவிற்கு கொடுத்திருக்கும் Offer என்ன தெரியுமா.?
Kamal Haasan: அடடா..! தக் லைஃப் செய்ய போய், பிரச்னையில் சிக்கிய கமல் - என்ன பேசியிருக்காரு தெரியுமா?
Kamal Haasan: அடடா..! தக் லைஃப் செய்ய போய், பிரச்னையில் சிக்கிய கமல் - என்ன பேசியிருக்காரு தெரியுமா?
IPL 2025 Playoff: குவாலிஃபையரில் PBKS Vs RCB, எலிமினேட்டரில் GT Vs MI - எங்கு, எப்போது? ஜிதேஷ் ருத்ரதாண்டவம்
IPL 2025 Playoff: குவாலிஃபையரில் PBKS Vs RCB, எலிமினேட்டரில் GT Vs MI - எங்கு, எப்போது? ஜிதேஷ் ருத்ரதாண்டவம்
Mahindra BE 6 XEV 9e: விற்றுதீரும் EV கார்கள், குஷியில் மஹிந்திரா கொடுத்த சாஃப்ட்வேர் அப்டேட் - இனி இதுவும் ஈஷி தான்
Mahindra BE 6 XEV 9e: விற்றுதீரும் EV கார்கள், குஷியில் மஹிந்திரா கொடுத்த சாஃப்ட்வேர் அப்டேட் - இனி இதுவும் ஈஷி தான்
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Student Visa-US Warns: இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Embed widget