TVK Aadhav Arjuna: "பேச முடியாத அளவில் துயரத்தில் உள்ளோம்"- உருக்கமாக பேசிய ஆதவ் அர்ஜுனா
Aadhav Arjuna: த.வெ.க.வை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

Aadhav Arjuna: த.வெ.க.வை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
குடும்ப இழப்பு:
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று (அக்டோபர் 10) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”பொதுவாக நமது வீட்டிலேயோ அல்லது குடும்பத்திலோ மிகப்பெரிய இழப்பு ஏற்படும் போது 16 நாள் மிகப்பெரிய துக்க நாளாக நாம் அந்த வலியோடு இருப்போம்.
எங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் சரி தமிழக வெற்றிக் கழகமும் சரி தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்களும் சரி எங்களுடைய குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பை போல் பார்க்கிறோம். 16 வது நாள் காரியம் முடியும் வரை யாரும் பேச முடியாத அளவிற்கு துக்கத்தில் இருக்கிறோம்.
நீதிமன்றத்தை நாடியுள்ளோம்:
இதில் எங்களது நியாயங்களை சொல்வதற்கும் எங்கள் மீது பரப்பப்படும் அவதூறுகளுக்கு பதில் சொல்வதற்கும் தவறான செய்திகள் பரப்பட்ட போதும் அமைதியாக பதில் கொடுக்காமல் இருப்பது எங்கள் வலிகளை எங்களுடைய மக்களுக்காக அவர்களுடன் இருக்கிறோம். என்ன உண்மையோ அதை கண்டிப்பாக சொல்வோம். எங்கள் கட்சியை முடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் இதனால் நாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.
ஒரு சாமானிய மனிதனின் நம்பிக்கையாக உண்மை வெளிக்கொண்டுவர நீதி துறையை நாடியுள்ளோம். 16 நாள் காரியம் முடிந்த உடன் அந்த மக்களின் வலிமிகுந்த நாட்களுடன் நாங்கள் சென்றிகொண்டிருக்கிறோம்.
அவர்களை விரைவில் சந்திப்போம். 16 நாட்கள் முடிந்த உடன் மற்றதை பேசுவோம். நீங்கள் எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக ஒரு சாமானியராக காத்துக்கொண்டிருக்கிறோம். கட்சியின் மாவட்ட செயலாளர்களை கடுமையாக கைது செய்து கொண்டிருக்கிறார்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டு. அவர்களையும் வெளியில் கொண்டுவருவதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.





















