மேலும் அறிய

CM MK Stalin: தேர்தலுக்குப் பின் கூட்டணி கூடாது - எதிர்க்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்..!

CM MK Stalin on Opposition Party Meeting: இந்த கூட்டணி இறுதி வரை உறுதியாக இருக்க வேண்டும் என அந்த கூட்டத்தில் வலியுறுத்தியதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். 

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்குபெற்ற பின்னர், சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இந்த கூட்டணி இறுதி வரை உறுதியாக இருக்க வேண்டும் என அந்த கூட்டத்தில் வலியுறுத்தியதாக கூறினார். 

பீகார் மாநிலம் பாட்னாவில் பிகார் முதலமைச்சர்,  நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட மொத்தம் 16 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம், மாலை 3:30 மணி வரை நடைபெற்றது.  

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் சென்னை திரும்பிய முதலமைச்ச மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “எதிர்க்கட்சிகளின் கூட்டம் எனக்கு மிகவும் நம்பிக்கை அளித்துள்ளது. பாஜக என்ற ஒற்றைக் கட்சிக்கு எதிரான கூட்டமாக இது இருந்து விடக்கூடாது, ஜனநாயகத்தை, மக்களாட்சியை, மதச்சார்பின்மையை, பன்முகத்தன்மையை, ஒடுக்கப்பட்ட மக்களை ஏழை எளிய மக்களை காக்க வேண்டுமானால், பாஜக மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் மிகத் தெளிவாக இருக்கிறோம் என கூறினார். 

அதேபோல், அந்தக் கூட்டத்தில், “ இந்த கூட்டணி இறுதி வரை உறுதியாக இருக்கவேண்டும் என்பதை நான் வலியுறுத்தினேன். 2023ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி, கூட்டத்தைக் கூட்டினார்கள், 2024ஆம் ஆண்டு வெற்றி பெற்றார்கள் என்பது தான் வரலாறாக இருக்க வேண்டும் என அழுத்தமாக பேசினேன். மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணிதான் தமிழ்நாட்டில் அனைத்து வெற்றிகளுக்கு காரணம். அதேபோல் அகில இந்திய அளவிலும் ஒற்றுமைதான் முக்கியம்” என எடுத்துக்கூறியதாக  கூறினார். 

மேலும், அந்த கூட்டத்தில், ”எந்த மாநிலத்தில் எந்த கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்த கட்சித் தலைமையில் கூட்டணி வைத்துக்கொள்ளலாம். கூட்டணியாக அமைக்க முடியவில்லை என்றால், தொகுதி பங்கீடு மட்டும் செய்துகொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்று சொன்னால், பொது வேட்பாளர் அறிவித்துக்கொள்ளலாம். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அமைத்துக்கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்காது. அரசியல் கட்சிகளிடையே குறைந்தபட்ச செயல் திட்டம் வகுக்கப்படவேண்டும். இதுபோன்ற 7 பிரச்னைகளை சரி செய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கைக் குழு அமைக்கப்படவேண்டும்” என அவர் கூறியதாக செய்தியாளர் சந்திப்பில் கூறினார். 

மேலும் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, பாட்னாவில் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளாமல் போனதற்கு காரணம், வானூர்திக்கு நேரம் ஆகிவிட்டது என்பதால் தான், உடனே புறப்பட்டேன். அதில் வேறு எந்த காரணமும் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilisai Soundararajan : ”முன்னாள் ஆளுநருக்கே இந்த நிலையா?” போலீசாரிடம் எகிறிய தமிழிசை..!
Tamilisai Soundararajan : ”முன்னாள் ஆளுநருக்கே இந்த நிலையா?” போலீசாரிடம் எகிறிய தமிழிசை..!
Tamil 3rd Language: ”தமிழ்” மொழிக்கு சிறப்பு அந்தஸ்து..! நாடு முழுவதும் பறந்த கடிதம், மூன்றாவது பொதுமொழியாகும் செம்மொழி?
Tamil 3rd Language: ”தமிழ்” மொழிக்கு சிறப்பு அந்தஸ்து..! நாடு முழுவதும் பறந்த கடிதம், மூன்றாவது பொதுமொழியாகும் செம்மொழி?
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்...என்ன தெரியுமா..?
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்...என்ன தெரியுமா..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chandrababu Naidu vs MK Stalin : ’’இந்தி அவசியம்!’’சந்திரபாபு நாயுடு vs ஸ்டாலின் மும்மொழிக்கொள்கைStudents with PMK Flag : ஆண்டு விழாவா?கட்சிக்கூட்டமா?பாமக துண்டுடன் மாணவர்கள் சாதி பாடலுக்கு நடனம்KT Rajendra Balaji Angry : ’’ஏய்..ஆள் பாத்து போடுவியா டா’’நிர்வாகியை அறைந்த ராஜேந்திர பாலாஜி மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை!TVK Vijay Slams Delimitation | ”பல லட்சம் கோடி கடன் புதிய MP-க்கள் அவசியமா?” மோடியை வெளுத்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilisai Soundararajan : ”முன்னாள் ஆளுநருக்கே இந்த நிலையா?” போலீசாரிடம் எகிறிய தமிழிசை..!
Tamilisai Soundararajan : ”முன்னாள் ஆளுநருக்கே இந்த நிலையா?” போலீசாரிடம் எகிறிய தமிழிசை..!
Tamil 3rd Language: ”தமிழ்” மொழிக்கு சிறப்பு அந்தஸ்து..! நாடு முழுவதும் பறந்த கடிதம், மூன்றாவது பொதுமொழியாகும் செம்மொழி?
Tamil 3rd Language: ”தமிழ்” மொழிக்கு சிறப்பு அந்தஸ்து..! நாடு முழுவதும் பறந்த கடிதம், மூன்றாவது பொதுமொழியாகும் செம்மொழி?
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்...என்ன தெரியுமா..?
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்...என்ன தெரியுமா..?
Mookuthi Amman - 2: ‘மூக்குத்தி அம்மன் -2 பட ஹூட்டிங்; விரதம் இருக்கும் நயன்தாரா- வைரல் வீடியோ!
Mookuthi Amman - 2: ‘மூக்குத்தி அம்மன் -2 பட ஹூட்டிங்; விரதம் இருக்கும் நயன்தாரா- வைரல் வீடியோ!
Karthigai Deepam: அரிப்பில் அவதிப்பட்ட மகேஷ்.. ஆட்டம் போட வந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று!
Karthigai Deepam: அரிப்பில் அவதிப்பட்ட மகேஷ்.. ஆட்டம் போட வந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று!
தோனியின் நம்பிக்கை எனக்கு மிக முக்கியமானது
தோனியின் நம்பிக்கை எனக்கு மிக முக்கியமானது" - ருதுராஜ் கைக்வாட்
South Korea: ட்ரெய்னிங்னா அப்படி ஓரமா போய் பாம் போட வேண்டியதுதான, இப்படியா ஊருக்குள்ள போடுறது.?!
ட்ரெய்னிங்னா அப்படி ஓரமா போய் பாம் போட வேண்டியதுதான, இப்படியா ஊருக்குள்ள போடுறது.?!
Embed widget