மேலும் அறிய

Minister Srirangam Ramesh : தமிழ்நாடு அறநிலையத்துறைக்கு பிராமண அமைச்சர்.! யார் இந்த ஸ்ரீரங்கம் ரமேஷ்.?

Minister Srirangam Ramesh : தமிழகத்தில் தவெக ஆட்சியின் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பிராமண சமுதாயத்தை சேர்ந்த வெங்கட்ரமணன் ஏற்கனவே உணவுத்துறை அமைச்சராக பதவியேற்ற நிலையில், இன்று மற்றொரு பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர் அமைச்சராகியுள்ளார்.

தமிழகத்தில் தவெக ஆட்சி

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக- அதிமுக என மாறி மாறி ஆட்சி புரிந்து வந்த நிலையில், எதிர்பாரா திருப்பமாக திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நடிகர் விஜய் தலைமையிலான தவெக தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து கடந்த 10ஆம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அப்போது 9 அமைச்சர்களும் பதவியேற்றன்னர்.

இதில் எதிர்பார அறிவிப்பாக தமிழக அரசியல் வரலாற்றில் 50 ஆண்டு காலத்திற்கு பிறகு பிராமண சமுகத்தை சார்ந்த ஒருவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தது. ஏற்கனவே  பிராமணர் சமூகத்தை சேர்ந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்துள்ளார். அவரது ஆட்சி காலத்தில் கூட பிராமணர் சமூகத்தை சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை.  

தமிழக அமைச்சரவையில் பிராமண அமைச்சர்கள்

இந்த நிலையில் தான் தற்போது மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற வெங்கடரமணன் விஜய் அமைச்சரவையில் இடம்பிடித்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதலமைச்சர் விஜய்யின்  25 ஆண்டுகால நண்பராக இருந்து வரும் வெங்கட் ரமணன், 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் தொடங்கியது முதல் அரசியல் ரீதியாக விஜய்யோடு பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் தான் வெங்கட் ரமணனுக்கு உணவுத்துறையானது ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் ஏற்கனவே ஒரு பிராமண அமைச்சர் நியமிக்கப்பட்டதை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நிலையில் தற்போது மற்றொரு பிராமணரும் தமிழக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றமானது விஜய் மக்கள் இயக்கமாக மாறிய நிலையில் அதில் நீண்ட காலம் பணியாற்றியவர் தான் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ், 

வீட்டை அடகு வைத்து பிரச்சாரம்

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ரமேஷ், தனது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரியாவார். பி.இ.மெக்கானிக்கல் இன்ஜினிரிங் படித்துள்ளார். இது மட்டுமில்லாமல் அரசியல் பக்கமே தலைக்காட்டாத குடும்பத்தில் உருவான முதல் அரசியல் வாதியாகவும் ரமேஷ் உள்ளார். தமிழக வெற்றிக்கழகத்திலும் அரசியல் பணியை தொடங்கிய ரமேஷ்க்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்தார் தவெக தலைவர் விஜய். 
பணக்காரர்களுக்கு மட்டுமே அரசியல் என்ற நிலையில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ரமேஷ், பெரிய அளவில் பணபலம் இல்லாததால், தேர்தல் செலவுகளுக்காகத் தனது சொந்த வீட்டை அடகு வைத்து  பிரச்சாரம் செய்துள்ளார். 

அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்

இதனையடுத்து இரு பெரும் கட்சியின் வேட்பாளர்களை வீழ்த்தி ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார் ரமேஷ், இந்த நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை அறிநிலையத்துறை என்பது முக்கிய துறையாக உள்ளது. இந்த துறைக்கு அமைச்சராக ரமேஷை முதலமைச்சர் விஜய் நியமித்துள்ளார். அதே நேரம் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ரமேஷின் தாயார் இன்னமும் சமையல் வேலைக்கு தான் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

தவெக அரசின் 'மாற்றமா' இது? சட்டசபையில் அமைச்சர்கள் குழப்பம், முதல்வர் விஜய் மவுனம்! - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !
தவெக அரசின் 'மாற்றமா' இது? சட்டசபையில் அமைச்சர்கள் குழப்பம், முதல்வர் விஜய் மவுனம்! - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
Embed widget