Annamalai: பட்டியலின மக்களை இழிவுபடுத்தினாரா அண்ணாமலை? வன்னியரசுடன் வலுத்த மோதல்..
பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்ட பதிவு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
பிரதமர் மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பாஜகவினர் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து இதுகுறித்து ட்விட்டரில் தனது பதிவை வெளியிட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை,
”நம்பிக்கையின்மையிலிருந்து நம்பிக்கையை நோக்கி, இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி, பறையாவில் இருந்து விஷ்வ குருவாக” 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் மாற்றி வருகிறார் பிரதமர் மோடி என பதிவிட்டு இருந்தார்.
இதில் பறையர் என்பது குறிப்பிட்ட பட்டியலினச் சமூகத்தின் பெயர். அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டுள்ள அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து பதிவிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாலர் வன்னியரசு, வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி வைத்ததே இந்துத்துவம் தான். அப்படிப்பட்ட மூத்த பறையர்குடியை இழிவுபடுத்தும் அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும் என பதிவிட்டுள்ளார்.
From hopelessness to Hope
— K.Annamalai (@annamalai_k) May 30, 2022
From parochial mindset to Nation First
From dilly dallying to Conviction
From one sided to Holistic Development
From a pariah to a ViswaGuru
From Dark to Light
8 years & counting with Shri @narendramodi avl as our first servant! #8YearsOfSeva pic.twitter.com/RwnS7z2kNh
அதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, கத்தியை விட நம் புத்தி கூர்மை என்று சொல்லுவார்கள். உங்களுக்காக ஒரு ஆங்கில - தமிழ் அகராதி வாங்கி அனுப்புகிறேன், நான் பதிவிட்ட வார்த்தையின் அர்த்தத்தை பார்க்கவும். வாழ்க வளமுடன்! என பதிவிடுள்ளார். அதன்படி மேக்மில்லன் சொல் அகராதிப்படி, பறையா என்ற சொல்லின் பொருள், ஒரு நபராலோ, அமைப்பாலோ, நாட்டாலோ வெறுக்கப்படுபவர், என குறிப்பிட்டுள்ளார்.
#எச்சரிக்கை
— வன்னி அரசு (@VanniArasu_VCK) May 30, 2022
பாப்பானுக்கே மூப்பான் பறையன்,
கேப்பாரில்லாமல் கீழ் சாதியானான் என்பது முதுமொழி.
சனாதனத்தை-
வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி வைத்ததே இந்துத்துவம் தான்.
அப்படிப்பட்ட
மூத்த பறையர்குடியை இழிவுபடுத்தும்
சாதிய மனநோயாளி @annamalai_k மன்னிப்பு கேட்கவேண்டும். https://t.co/uVsBH5D6Ru
அதற்கு பதிலளித்த வன்னியரசு, பறையா என்பது இழிவுபடுத்த (offensive) பயன்படுத்தப்படும் பெயர் என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது. மேலும்,பறையா எனும் சொல் அவமதிக்கும் சொல்லாக தென்னிந்தியாவில் பார்க்கப்படுகிறது என்று ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி குறிப்பிடுகிறது. நீக்ரோ என்று அமெரிக்காவில் பயன்படுத்தினால் அது அவமதிப்பு. பறையாவும் அப்படிதான்.
அண்ணா வணக்கம்!
— K.Annamalai (@annamalai_k) May 30, 2022
கத்தியை விட நம் புத்தி கூர்மை என்று சொல்லுவார்கள்.
உங்களுக்காக ஒரு ஆங்கில - தமிழ் அகராதி வாங்கி அனுப்புகிறேன், நான் பதிவிட்ட வார்த்தையின் அர்த்தத்தை பார்க்கவும்.
வாழ்க வளமுடன்! https://t.co/M86yc9ZG7x pic.twitter.com/ge0iSlHJ4M
மேலும்,பறையா என்பது வரலாற்று அடிப்படையில் தென்னிந்தியாவில் உள்ள தொல்குடி பறையர் சமூகத்தை சேர்ந்தோரை குறிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பறையா என்று சொன்னால் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது சட்டம் என பதிலடி கொடுத்துள்ளார். இதையடுத்து , பறையா (Pariah) என்ற ஆங்கிலச் சொல்லின் மூலமே, பறையர் எனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை இழிவுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஒன்றுதான் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்