மேலும் அறிய

வரலாறு தெரியாத மூடர்கள்தான் டெல்லியை ஆண்டுக் கொண்டிருக்கிறார்கள் - டிகேஎஸ்.இளங்கோவன்

தமிழ்நாடு சமத்துவ பூமியாக நிலவுவதை மாற்றி பழைய நிலைமைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒற்றை சிந்தனையோடு ஒன்றிய அரசு நடந்து கொண்டிருக்கிறது.

 

விழுப்புரம்: திமுகவை பார்த்து இந்து விரோதி என கூறுகிறார்கள். இந்துக்களிலே 90 சதவீத மக்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என உருவான இயக்கம் தான் திராவிட இயக்கம. 90 சதவீத இந்துக்களின் முன்னேற்றத்திற்காக உருவான இயக்கத்தை பார்த்து இந்து விரோத இயக்கம் என்று சொன்னால் அது நகைச்சுவையாக உள்ளது என விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டிகேஎஸ்.இளங்கோவன் பேசினார்.

விழுப்புரத்தில் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ்.இளங்கோவன் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

முதலில் உரையாற்றிய டிகேஎஸ்.இளங்கோவன்.

தங்களுடைய திட்டத்திற்கு திமுக லேபிள் ஒட்டியதாக சிலர் பேசுகிறார்கள். கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் மூலம் எட்டு லட்சம் வீடுகளை கட்டி முடித்து குடிசை இல்லாத தமிழகமாக மாற்றுவது தான் அதன் நோக்கம். பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தை திமுக லேபிள் ஒட்டியதாக சிலர் கூறுகிறார்கள். வரலாறு தெரியாத மூடர்கள் தான் டெல்லியை ஆண்டுக் கொண்டிருக்கிறார்கள். 1970-ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி கலைஞர் புதிய வீடுகளை கட்டிக் கொடுத்தார். இந்த திட்டத்தை பார்த்து மத்திய அரசு வீடு கட்டும் திட்டத்தை தொடங்கியது. இந்தியா ஒரு நாடாக எப்போதும் இருந்ததில்லை. ஜிஎஸ்டி வரி கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வரி விதிக்கும் உரிமையை மாநிலங்களிடமிருந்து ஒன்றிய அரசு பறித்துக்கொண்டது. ஜிஎஸ்டி சட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு வருவாய் இழப்பீட்டை ஒன்றி அரசு ஈடு செய்யும் என கூறி இருந்தார்கள்.

ஜிஎஸ்டி வரி வசூலின் மூலம் வருடத்திற்கு 10 ஆயிரம் கோடி வழங்காமல் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது. இந்த தொகையின் மூலம் மக்களுக்கு பல நன்மை செய்ய முடியும். கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலில் எம்எஸ்.சுவாமிநாதன் அறிக்கை முழுமையாக செயல்படுத்துவேன் என மோடி கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளுக்கு எதிராக மூன்று விவசாய சட்டங்களை கொண்டு வந்தார். இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து மூன்று சட்டங்களையும் திரும்பப்பெற்றுக் கொண்டார். அடிப்படை ஆதார விலையை கேட்டு இன்றைக்கும் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி போராடும் விவசாயிகளை மோடி அரசு அடித்து விரட்டுகிறது.

விவசாயிகள் மீது கண்ணீர் புகை கொண்டு வீசுகிறது. பொய் பேசுவதே தொழிலாகக் கொண்டு ஒன்றிய அரசு நடைபெறுகிறது. மாநிலங்களுக்கு வாழ வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. தமிழர்கள் ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும். மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றும் அரசு தங்களை காப்பாற்றும் என்ற எண்ணத்தோடு வாழ வேண்டுமென அதற்கான திட்டங்களை வகுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். ஒன்றிய அரசு எல்லா வகையிலும் தமிழர்களுக்கு எதிராகவும், தமிழ்நாடு முன்னேறக்கூடாது என்பதற்காகவும், தமிழ்நாடு சமத்துவ பூமியாக நிலவுவதை மாற்றி பழைய நிலைமைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒற்றை சிந்தனையோடு ஒன்றிய அரசு நடந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இந்த நாடு முன்னேற வேண்டும் என்ற அக்கறை இல்லை.

திமுகவை பார்த்து இந்து விரோதி என கூறுகிறார்கள். இந்துக்களிலே 90 சதவீத மக்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என உருவான இயக்கம் தான் திராவிட இயக்கம. 90 சதவீத இந்துக்களின் முன்னேற்றத்திற்காக உருவான இயக்கத்தை பார்த்து இந்து விரோத இயக்கம் என்று சொன்னால் அது நகைச்சுவையாக உள்ளது. பொய்யை பேசுவது தான் அவர்களின் தொழில் எனப் பேசினார்.

தொடர்ந்து இரண்டாவதாக உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பொன்முடி:

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். இன்றைக்கு பிரதமர் பேசும்போது இலவச மின்சாரம் கொடுப்போம் என பேசுகிறார். விவசாயிகளின் கஷ்டத்தை பார்த்து கலைஞர் ஆட்சி காலத்திலேயே விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. புதுமைப்பெண் மற்றும் உரிமை தொகையாக ஆயிரம் கொடுக்கப்படுகிறது. இன்றைக்கு டெல்லியில் கெஜ்ரிவால் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினை பார்த்து இன்றைக்கு இதனை இந்தியாவே பின்பற்றிக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வை ஒழிக்க உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை நடத்தியுள்ளார்.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் நீட் ஒழிக்கப்படும் என கூறியுள்ளார். 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். சென்னையில் வெள்ளம் வந்தபோதும், தென் மாவட்டங்களிலும் வெள்ளம் வந்தது அப்போதெல்லாம் தமிழகம் வராத மோடி இன்றைக்கு தமிழகம் வந்துள்ளார். மதுரையில் எய்ம்ஸ் கட்டுவோம் என கூறினார். இன்னும் அந்த செங்கல் அப்படியே உள்ளது. எய்ம்ஸ் கட்டமுடியாதவர் தான் இன்றைக்கு அக்கறையாக பேசுகிறார் ஏனென்றால் இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் வரவுள்ளது. மணிப்பூருக்கு செல்லவில்லை ஏன் பாராளுமன்றத்திற்கு சரியாக செல்லாதவர் தான் மோடி. தமிழ்நாடு வந்து தற்போது அக்கறையாவை பேசுகிறார் மோடி. இந்திய முழுமைக்கும் பாஜக ஒழிக்கப்பட்டு விட்டது என பிரதமர் மோடிக்கு நன்றாகவே தெரியும் எனவே என்ன பிரச்சாரம் செய்தாலும் அவர் எதுவும் எடுபடாது எனப் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget