மேலும் அறிய

"தமிழ்நாட்டிலும் கோ பேக் ஸ்டாலின் என்ற ட்ரெண்டிங் வருவதற்கு காலம் வெகு தொலைவில் இல்லை" - ஆர்.பி.உதயகுமார்

அமலாக்கத்துறை விசாரணையை ஜாலியாக உள்ளது என்று உதயநிதி கூறி உள்ளது. இந்திய அரசியல் சட்டத்தை மதிக்கிறாரா? இல்லை மதிக்கவில்லையா? - ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு.

பீகாரிலே கோ பேக் ஸ்டாலின் என்ற ட்ரெண்டிங் உருவானது போல் மிக விரைவிலே தமிழ்நாட்டிலும் கோ பேக் ஸ்டாலின் என்கிற ட்ரெண்டிங் வருவதற்கு காலம் வெகு தொலைவில் இல்லை என ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்,”முதலமைச்சர் ஸ்டாலின்  பாட்னா பயணம் நல்ல விளைவை தரும் என்று கூறியுள்ளார். ஆனால் அது நல்ல விளைவை தருமோ? இல்லையோ? கடுமையான விபரீதத்தை தான் இன்றைக்கு தந்து இருக்கிறது. பீகார் செல்லும் முதலமைச்சருக்கு பீகாரில் உள்ள சமூக வலைதளங்களில் கோ பேக் ஸ்டாலின் என்று ட்ரெண்டிங்காக உருவாகியுள்ளது. இன்றைக்கு அரசின் குளறுபடியால் நிர்வாகம் முடங்கியுள்ளது, அமலாகத்துறை விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, மேலும் திமுக கூட்டணி கட்சிகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள வைகோ ஆளுநரை பதவி நீக்கம் செய்ய கையெழுத்து வாங்கி வருகிறார். நல்லகண்ணு, திருமாவளவன் ஆகியோர் கையெழுத்திட்டனர். அறிவாலயத்தில் ஸ்டாலினிடம் கையெழுத்து வாங்க வைகோ சென்றபொழுது பல்வேறு காரணம் காட்டி கையெழுத்திட மறுத்து விட்டார் ஸ்டாலின். கூட்டணி கட்சிகளில் பேசி எந்த முடிவும் எடுக்காமல் கூட்டணி கட்சிகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


இன்னொரு புறத்தில் தேசியத் தலைவர்களை அழைத்து வருவதில் ஸ்டாலினுக்கு பின்னடைவு ஏற்படுகிறது. கர்நாடகாவில் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் ஏறத்தாழ 29 கட்சிகளுக்கு மேலே அங்கு அழைப்பு விடுக்கப்பட்டு ,அதில் 19 கட்சிகள் மேடையில் இருந்த பொழுது ஸ்டாலினை பின்னுக்கு தள்ளி விட்டனர். இது தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட தலைகுனிவாகும். அதனால் ராகுல் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே கூட்டத்தை புறக்கணித்து சென்று விட்டார் ஸ்டாலின். தமிழ்நாட்டில் முதலமைச்சருக்கு செல்வாக்கு குறைந்து கொண்டு வருகிறது. தமிழ்நாடு மக்கள் முதலமைச்சர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். கடந்த இரண்டு கால நிர்வாக  சீர்கேட்டினால் அரசே முடங்கிப் போய் உள்ளது. தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமைக்கு பிற மாநில முதல்வர்கள், தேசியத் தலைவர்களை அழைத்து வந்தால்   தமிழ்நாட்டுக்கு வளர்ச்சி, தமிழ் மொழிக்கு வளர்ச்சி, தமிழ் இனத்திற்கு வளர்ச்சியாக இருக்கும்.  இந்த இரண்டு ஆண்டுகளிலே தொடர்ந்து தன்னையும், தன் குடும்பத்தையும், தன் தந்தையும் முன்னிலை காட்டுகிற அக்கறையையும், கவனமும் மக்களை முகம் சுழிக்கும் மட்டும் அல்ல, அந்த தேசியத் தலைவர்களும், பிற மாநிலமைச்சர்களும் முகம் சுழிக்கின்றனர். சென்னை கிண்டி மருத்துவமனையில் ஐந்தாம் தேதி திறப்பு விழாவிற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 15ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி வரவில்லை. அப்படி என்றால் சரியாக ஜனாதிபதியை  அணுகவில்லையா? அல்லது முதலமைச்சரின் நடவடிக்கைக்காக புறக்கணிப்பா? என்ன காரணம் என்பது தான் தமிழ்நாட்டு மக்களுடைய இன்றைய கேள்வியாக உள்ளது.

தன்னை தேசிய கட்சி தலைவராக அவதாரமாக ஸ்டாலின் கோருவதை தமிழ்நாடு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை,  கூட்டணி கட்சிகளும் ஏற்ற கொள்ளவில்லை தேசியக் கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை ஸ்டாலின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. முதலமைச்சர்கள் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பார்கள். ஆனால் இன்றைக்கு பீகாரில் தமிழக முதலமைச்சருக்கு கோ பேக் ஸ்டாலின் என்று கூறிவருவது ஸ்டாலினால் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சியில் குழப்பம், நிர்வாக குளறுபடி, அமைச்சர் கைது இந்தநிலையில் கூட தன்னையும், தனது தந்தையும், மகனையும் முன்னிலைப்படுத்துவதிலே கவனம் செலுத்துவதாலே தொடர்ந்து அவருக்கு பின்னடைவு ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு மக்களுடைய வளர்ச்சிக்கு அவர் எப்போது கவனம் செலுத்தப் போகிறார் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. தமிழக மக்களின் கோரிக்கைகளை கருத்துக்களை எடப்பாடியார் கூறி வருவதை ஆளுங்கட்சி எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களிடத்திலே தனது தந்தை, தான், தனது மகன் என மூன்று தலைமுறையை அவர் திணிப்பதை இன்றைக்கு மக்கள் முகம் சுளிக்கிறார்கள். 




எடப்பாடியார் எடுத்து வரும் விமர்சனங்கள், ஆலோசனைகள், அறிவுரைகளை செவி கொடுத்து கேட்டால் இந்த தாய் தமிழகம் மீண்டும் எழுவதற்கு வாய்ப்பு இருக்கும். நாடு முழுவதும் 5,500 இன்றைக்கு பார்கள் லைசென்ஸ் இல்லாமல் செயல்படுவது என்பது எவ்வளவு அதிர்ச்சிகரமான தகவல், ஒரு நாளைக்கு ஒரு கோடி மது பாட்டில்கள் விற்பனை ஆகிறது. ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் அப்படியானால் ஒரு நாளைக்கு பத்து கோடி, மாதத்துக்கு 300 கோடி, வருடத்திற்கு 3600 கோடி, இரண்டு வருடத்திற்கு 7200 கோடி இது பத்து ரூபாய் கணக்கு, இன்னொரு புறத்திலே சாராயம் ஆலையிருந்து நேரடியாக  வரி செலுத்தாமல் செல்லுகிற காரணத்தால் ஆயிரக்கணக்கான கோடி அரசு கஜானாவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அடித்தது செந்தில் பாலாஜி, அதை கொடுத்தது டாஸ்மாக் குடிகாரர்கள் ஆனால்  அதை எடுத்தது யார் என்பதுதான் மக்களின் கேள்வியாக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அமலாக்கத்துறை விசாரணையை ஜாலியாக போய்க்கொண்டிருக்கிறது என்று ஒரு விளக்கம் தருகிறார். அப்படியானால்  இந்த இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது என்ன மதிப்பு மரியாதை வைத்திருக்கிறாரா? சட்டத்தை மதிக்கிற ஒரு பிரதியாக அமைச்சராக இந்த கருத்தை சொல்லி இருக்கிறாரா  அல்லது சட்டத்தை மதிக்காத,  இந்திய அரசியல் சட்டத்தை மதிக்க மாட்டோம் கூறியுள்ளாரா? பீகாரிலே கோ பேக் ஸ்டாலின் என்ற ட்ரெண்டிங் உருவானது போல் மிக விரைவிலே தமிழ்நாட்டிலும் கோ பேக் ஸ்டாலின் என்கிற ட்ரெண்டிங் வருவதற்கு காலம் வெகு தொலைவில் இல்லை” எனக் கூறியுள்ளார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget