மேலும் அறிய

தஞ்சை மாணவி தற்கொலை: ஜாமினில் வந்த விடுதி காப்பாளரை வரவேற்று சால்வை போர்த்திய திமுக எம்.எல்.ஏ.,!

திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மத்திய சிறை வெளியே காத்திருந்து, வெளியே வந்த சகாயமேரிக்கு சால்வை அணிந்து மரியாதை செலுத்தினார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி களைக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு ஒருநாள் முன்பு நீதிபதி முன் அளித்த வாக்குமூலத்தில் விடுதிக் காப்பாளர் தன்னை துன்புறுத்தி வந்ததாக குறிப்பிடிருந்தார். இதனடிப்படையில், விடுதி காப்பாளர்  சகாயமேரியை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. பள்ளி நிர்வாகம் அவரை மதம்மாறச் சொல்லி துன்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின.

தஞ்சை மாணவி தற்கொலை: ஜாமினில் வந்த விடுதி காப்பாளரை வரவேற்று சால்வை போர்த்திய திமுக எம்.எல்.ஏ.,!

மாணவியை மதம்மாறச் சொல்லி வற்புறுத்தி யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக அம்மாவட்டஎஸ்.பி. ரவளிப்பிரியா கூறியிருந்தார். மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விசாரணையிலும் மதம்மாற்றச் சொல்லி யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று தெரியவந்ததாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தார்.

மேலும், மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக வல்லம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையிலும் மாணவியின் பெற்றோர்களான முருகானந்தம், சித்தி சரண்யா, மாணவி பேசுவது போல வைரலான வீடியோவை எடுத்தவர் ஆகியோர் நேரில் ஆஜராகினர். மேலும், மாணவி பேசியதாக வைரலான வீடியோவை எடுத்த செல்போன் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆய்விற்காக சென்னையில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டது.

மாணவி உயிரிழந்தது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உயிரிழந்த மாணவியின் தந்தையான முருகானந்தம் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த நிலையில்தான், சி.பி.ஐ. விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் விஸ்வரூபமானதைத் தொடர்ந்து தஞ்சை எஸ்.பி. முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டார்.

இந்நிலையில் இவ்வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி பேலா எம் திரிவேதி ஆகியோர் விசாரித்தனர்.  வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற கிளைக்கு ஆணைக்கு தடையில்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். பள்ளி மாணவி மரண விவகாரம்  வேண்டுமென்றே அரசியல் ஆக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பு வாதம் செய்தது. இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிமன்றம் இந்த விவகாரத்தை தமிழ்நாடு அரசு கெளரபிரச்னையாக பார்க்க வேண்டாமென தெரிவித்தது.

தஞ்சை மாணவி தற்கொலை: ஜாமினில் வந்த விடுதி காப்பாளரை வரவேற்று சால்வை போர்த்திய திமுக எம்.எல்.ஏ.,!

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்திற்கு திமுக உதவுவதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார். போதாக்குறைக்கு நேற்று சென்னையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்தை, பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி.,யினர் முற்றுகை போராட்டம் நடத்தி கைதாகினர். இந்நிலையில் ஜாமின் கிடைத்ததால், திருச்சி மத்திய சிறையில் இருந்து நேற்று முன்தினம் விடுதி காப்பாளர்  சகாயமேரி விடுதலையாகியுள்ளார்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மத்திய சிறை வெளியே காத்திருந்து, வெளியே வந்த சகாயமேரிக்கு சால்வை அணிந்து மரியாதை செலுத்தி வரவேற்ற புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. சகாயமேரிக்கு திமுகவினர் உதவுதாக அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு எழுப்பி வந்த நிலையில், சிறைக்கு வந்த திமுக எம்எல்ஏ., குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Eye Check-Ups: பெற்றோர் கவனத்திற்கு..! குழந்தைகளுக்கு கண் பரிசோதனை ஏன் அவசியம்? இவ்வளவு விஷயம் இருக்கா?
Eye Check-Ups: பெற்றோர் கவனத்திற்கு..! குழந்தைகளுக்கு கண் பரிசோதனை ஏன் அவசியம்? இவ்வளவு விஷயம் இருக்கா?
"சிவகுமார் டான்சைப் பாத்த ஒரே காமெடியா இருந்துச்சு" ஓப்பனா போட்டு உடைத்த பாலா!
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
Embed widget