மேலும் அறிய

TN Headlines: தேமுதிகவில் அதிரடி மாற்றம்! மிக்ஜாம் வெள்ள நிவாரணம்! தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது இதுதான்..

தமிழ்நாட்டில் காலை முதல் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தே.மு.தி.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று திருவேற்காட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார். விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதால், கட்சியின் புதிய பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டார். விஜயகாந்த் மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டதை கண்ட தொண்டர்கள் மிகுந்த சோகம் அடைந்தனர்.

மேலும் படிக்க: DMDK General Secretary: அரசியலில் அதிரடி திருப்பம்! தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா நியமனம்..!

வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியும், மின்சாரம் தடைபட்டும் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில், வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக்ஜாம் புயல் பாதிப்பிற்கு நிரந்தர நிவாரணமாக ரூபாய் 12 ஆயிரத்து 659 கோடி தேவை என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க:TN CM Stalin: நிரந்தர நிவாரணமாக ரூ. 12,659 கோடி தேவை : மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்..

வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வரும் நிலையில், சென்னையில் மிக்ஜாம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வங்கக்கடலில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 16 மற்றும் 17ம் தேதி தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: TN Rain Alert: 16 மற்றும் 17-ஆம் தேதி கனமழை எச்சரிக்கை.. சென்னைக்கு எப்படி? எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கும்?

தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இதையடுத்து, அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மேலும் படிக்க: Udhayanidhi Stalin: அசுர வளர்ச்சி.. அமைச்சராக உதயநிதி பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு! செயல்பாடுகள் என்னென்ன?

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், இயக்குநருமான ரா.சங்கரன் இன்று காலமானார். 7 படங்களை இயக்கியும், ஏராளமான படங்களில் நடித்துள்ள சங்கரன் காலமானதற்கு இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மௌனராகம் படத்தில் இவர் நடித்த சந்திரமௌலி கதாபாத்திரம் மிக மிக பிரபலம் ஆகும்.

மேலும் படிக்க: Ra. Sankaran: தமிழ் சினிமாவில் அடுத்த சோகம்.. உடல்நலக்குறைவால் மூத்த இயக்குநர் ரா.சங்கரன் காலமானார்..

தமிீழ

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Seniors :  “மூத்தவர்களுக்கு கல்தா ; இளைஞர்களுக்கு வாய்ப்பு” கலக்கத்தில் திமுக சீனியர்கள்..!
DMK Seniors : “மூத்தவர்களுக்கு கல்தா ; இளைஞர்களுக்கு வாய்ப்பு” கலக்கத்தில் திமுக சீனியர்கள்..!
Zelensky: இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.!! ஜெலன்ஸ்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...
இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.!! ஜெலன்ஸ்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...
MK Stalin slams H.Raja: நடு­ராத்­தி­ரி­யில் ஏன் சுடு­காட்டுக்­குப் போக வேண்­டும்?  எச் ராஜவுக்கு முதல்வர் காட்டமான பதிலடி
MK Stalin slams H.Raja: நடு­ராத்­தி­ரி­யில் ஏன் சுடு­காட்டுக்­குப் போக வேண்­டும்? எச் ராஜவுக்கு முதல்வர் காட்டமான பதிலடி
Oscars 2025: 22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth | ”தலைவர் அரசியலுக்கு வருவார்? 2026ல்  நிச்சயம் நடக்கும்” ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்NEET Suicide | NEET தேர்வு பயம் மாணவி தூக்கிட்டு தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு..! | Villupuramதேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Seniors :  “மூத்தவர்களுக்கு கல்தா ; இளைஞர்களுக்கு வாய்ப்பு” கலக்கத்தில் திமுக சீனியர்கள்..!
DMK Seniors : “மூத்தவர்களுக்கு கல்தா ; இளைஞர்களுக்கு வாய்ப்பு” கலக்கத்தில் திமுக சீனியர்கள்..!
Zelensky: இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.!! ஜெலன்ஸ்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...
இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.!! ஜெலன்ஸ்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...
MK Stalin slams H.Raja: நடு­ராத்­தி­ரி­யில் ஏன் சுடு­காட்டுக்­குப் போக வேண்­டும்?  எச் ராஜவுக்கு முதல்வர் காட்டமான பதிலடி
MK Stalin slams H.Raja: நடு­ராத்­தி­ரி­யில் ஏன் சுடு­காட்டுக்­குப் போக வேண்­டும்? எச் ராஜவுக்கு முதல்வர் காட்டமான பதிலடி
Oscars 2025: 22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 LIVE: விருதுகளை அள்ளி குவிக்கும் அனோரா திரைப்படம்! ஆஸ்கர் விருதுகள் நேரலை
Oscars 2025 LIVE: விருதுகளை அள்ளி குவிக்கும் அனோரா திரைப்படம்! ஆஸ்கர் விருதுகள் நேரலை
"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
Embed widget