மேலும் அறிய

“விஜய் ஏற்றிய கொடி கம்பத்திற்கு தீப ஆராதனை” கட்சி அலுவலகம் முழுவதும் பூஜை செய்த புஸ்ஸி ஆனந்த்!

Tamilaga Vettri Kazhagam "தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் நேற்று ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டுள்ளது "

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யும் ஆயுதபூஜை. சரஸ்வதி பூஜை வாழ்த்து கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கம் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாளில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் வாழ்த்து

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அவரது ஒவ்வொரு செயல்பாடுகளும் மக்களாலும், அரசியல் கட்சிகளாலும் கண்காணிக்கப்பட்டே வருகிறது. அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் இதுவரை த.வெ.க.வின் கொள்கை என்னவென்று இதுவரை கூறவில்லை.

விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிலே அவர் தனது கொள்கையை மக்கள் மத்தியில் கூற உள்ளார். தமிழ் தேசியம், திராவிடம், தேசியம் என பல கொள்கைகள் தமிழ்நாட்டின் அரசியலில் மோதிக் கொண்டு வரும் சூழலில், நடிகர் விஜய் எதை சார்ந்து இயங்கப் போகிறார்? என்பது பெரும் கேள்விக்குறியாக அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உள்ளது.

சிலர் விமர்சனம்

இந்தநிலையில், நடிகர் விஜய் கடந்த மாதம் வந்த விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு வாழ்த்து கூறவில்லை. இது பேசுபொருளாக மாறியது. பெரியாரின் பிறந்த நாளுக்கு நேரில் சென்று பெரியாரின் நினைவிடத்தில் மாலை வைத்து மரியாதை செலுத்திய விஜய், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறவில்லை என்று கூறி சிலர் விமர்சித்தனர்.

இந்த சூழலில், விஜய் பொதுமக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்து கூறியுள்ளார். அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதற்காகவே விஜய் ஆயுத பூஜை வாழ்த்து கூறியிருப்பதாகவும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பனையூரில் நடந்த ஆயுத பூஜை

இந்தநிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின், தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை நடைபெற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் பக்தி பரவசத்துடன் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சுவாமி படங்களுக்கு, நிவார்தனை செய்து, பொரிகடலை மற்றும் சுண்டல் ஆகியவற்றை வைத்து படையல் போட்டுள்ளார். தொடர்ந்து விஜய்  கட்சி அலுவலகத்தில் ஏற்றி வைத்த கொடி கம்பத்திற்கு பூஜை செய்யும் புகைப்படம் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

குழப்பமான மனநிலையில் விஜய் ?

நடிகர் விஜய் குழப்பமான மனநிலையில் இருப்பதாக இதன் மூலம் தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். முதலில் தந்தை பெரியார் பிறந்தநாளன்று அவருடைய சிலைக்கு மாலை அணிவித்ததை வைத்து, விஜய் பெரியார் வழியில் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.‌ அதன்பிறகு அவரது கட்சி லேட்டர் பேடில் விஜய் குங்கும பொட்டு வைத்ததுபோல் இருந்த புகைப்படம் அகற்றப்பட்டு, வெறும் நெற்றியோடு இருக்கும் புகைப்படம் அச்சிடப்பட்டது. மேலும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் இருந்தபோது விஜய்க்கு எதிர்ப்பும், ஒரு தரப்பில் ஆதரவும் எழுந்தது. இந்தநிலையில் மாநாட்டிற்கு பந்தல்கால் நடும் விழா நடந்தபோது பல்வேறு வகையில் விமர்சனங்கள் எழுந்திருந்தன. இந்தநிலையில், ஆயுத பூஜை கொண்டாட்டம் தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் நடந்திருப்பது, விஜய் குழப்பமான மனநிலையில் இருக்கிறாரா என கேள்வி எழுந்துள்ளதாக அரசியல்  விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Embed widget