டெல்லியில் தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ.,க்கள்; பிரதமர் மோடி கொடுத்த ‛அட்வைஸ்’
நடைபெற்ற முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சரஸ்வதி, எம்.ஆர்.காந்தி ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் நான்கு பேர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. 159 இடங்களில் திமுக கூட்டணி வென்றது. இதில், திமுக 125 இடங்களை கைப்பற்றியது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முதமைச்சராக பெறுப்பேற்றார். இந்தத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும், அதேவேளையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக 4 தொகுகளில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இதில், கோவை தெற்கு தொகுதியில் மட்டுமே அரசியலுக்கு புதுமுகமான கமல்ஹாசனை பாஜக வீழ்த்தியது. மற்ற மூன்று இடங்களில் பாஜக வீழ்த்தியிருப்பது பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற திமுக என்பது அனைவரையும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
லாட்ஜில் ‛உள்ளே வெளியே’ விளையாடிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. கைது!
இந்நிலையில், டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. நடைபெற்ற முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சரஸ்வதி, எம்.ஆர்.காந்தி ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனும் உடனிருந்தார். இந்தச் சந்திப்பின்போது, பல்வேறு அறிவுரைகளை எம்எல்ஏக்களுக்கு பிரதமர் வழங்கியதாகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான தேவையானதை பிரதமரிடம் பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.
பிரதமரிடம் தமிழ்நாடு பாஜக எம்எல்ஏக்கள் பேசியது என்ன?
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு பாஜக எம்எல்ஏக்கள் இன்று சந்தித்து வாழ்த்து பெற்ற பின்னர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான தேவையானதை பிரதமரிடம் பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினார்கள். மாமல்லபுரம், தஞ்சாவூர் போன்ற ஆன்மீக சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும், நீர்சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்திள்ளோம். நதிகள் இணைப்பு குறித்தும் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது. அவர் சில அட்வைஸ்களை வழங்கினார். காவிரி விவகாரத்தில் தமிழக உரிமைக்காக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும்" என்று கூறினார்.
முன்னதாக, புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் பிரதமரை சந்திருந்தனர். இந்த நிலையில், பிரதமருடன் தமிழ்நாடு பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, புதுச்சேரியின் அனைத்து சுற்று வளர்ச்சிக்கான பல்வேறு முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தன்னை சந்தித்த எம்.எல்.ஏ.,க்களிடம், சட்டமன்றத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று மோடி சில அட்வைஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக திமுக பெரும்பான்மையாக உள்ள சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என மோடி சில ஆலோசனைகளை கூறியதாக கூறப்படுகிறது.
Met a delegation of MLAs from Puducherry. Discussed the various efforts for Puducherry's all-round development. pic.twitter.com/sK4fUMOR3E
— Narendra Modi (@narendramodi) July 1, 2021
கடந்த மாதம் சென்னையில் பாஜகவின் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும், கட்சியை வலிமைப்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது. மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் வலிமையான எதிர்க்கட்சியாக செயல்படுவது எப்படி என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டம் தொடர்பாக, தினமலர் நாளிதழின் 23 ஜூன் 2021 தேதியிட்ட இதழில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி குறித்து செய்திவிட்டிருந்தது. அதில் ‘கமலாலயத்தில் விசாகா கமிட்டி விசாரிக்கும் சூழல் வரலாம்’எனக் குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய செய்தி ஒன்றைப் பதிப்பித்திருந்தது. இந்தச் செய்தி குறித்துக் கடும் விமர்சனத்தை எழுப்பியிருக்கும் தமிழ்நாடு பாரதிய ஜனதா தினமலர், நாளிதழுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
உத்தரகாண்ட் முதல்வர் ராஜினாமா: யார் அடுத்த முதல்வர்? இன்று ஆலோசனை!