மேலும் அறிய

போட்டி எல்லா இடத்திலயும் கடினமாத் தான் இருக்கும்.. ஆனாலும் ஜெயிப்போம் - வேட்பாளர் சுந்தர் சி பேட்டி !

போட்டி எல்லா இடத்திலயும் கடினமாத் தான் இருக்கும். போட்டின்னு பார்த்தா நாம வந்து ஒதுங்கிப் போக முடியாது. இயக்குநர் சுந்தர் சி பேட்டி.

போட்டி எல்லா இடத்திலயும் கடினமாத் தான் இருக்கும். போட்டின்னு பார்த்தா நாம வந்து ஒதுங்கிப் போக முடியாது. ஜெயிக்கிறதுக்குத் தான் போராடுறோம். கண்டிப்பாக ஜெயிப்போம்ங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. - மதுரை மத்திய தொகுதி என் டி ஏ கூட்டணி வேட்பாளர் சுந்தர் சி பேட்டி

ஏ.சி.சண்முகம்

மதுரை மத்திய தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும் இயக்குனருமான சுந்தர் சி சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அப்போது சுந்தர் சி செய்தியாளர்களிடம் பேசுகையில்..,” மதுரை மீனாட்சி அம்மன் அருளாலும், மதுரை மக்களின் அன்பாலும், மதுரை மண்ணின் மேல் நான் வைத்திருக்கிற நம்பிக்கையாலும் கண்டிப்பாக இங்கே நல்லபடியாக வெற்றிக்கனி எனக்கு மதுரை மக்கள் பரிசளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் முன்னால் இன்று என்னுடைய முதல் பேட்டியை ஆரம்பிக்கிறேன்.

வாய்ப்பளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இதுக்கு முன்னாடி சினிமாவில் வந்து சினிமா இயக்குநராக எத்தனையோ பேட்டிகளைக் கொடுத்திருக்கேன். இந்தக் களம் வந்து எனக்கு ரொம்ப புதுசு. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, அம்மா அவர்களால் வளர்க்கப்பட்டு, இன்று புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களால் ஆதரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இரட்டை இலைச் சின்னத்தில் நான் நிற்கக் காரணமாக இருந்த புதிய நீதி கட்சித் தலைவரும் எனது மூத்த சகோதரருமான ஏ.சி. சண்முகம் ஐயா அவர்களுக்கும், இந்த வாய்ப்பளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

மதுரை தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் உண்டா ஏன்னா நீங்க சென்னையில் இருக்கீங்க, மதுரையைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் குறித்த கேள்விக்கு:

”மதுரை வந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்-ருடைய கோட்டை, புரட்சித் தலைவி அம்மாவுடைய கோட்டை. அதிலே நிறைய மதுரை மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. ஜிப்மர் மருத்துவமனையை விரைவில் திறக்க வேண்டும். அதுபோன்று பல்வேறு சாலை வசதிகள், மேம்பாலங்கள், பல்வேறு மதுரை வளர்ச்சிக்காகப் புதிய நீதி கட்சி இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது”  என ஏ.சி. சண்முகம் கூறினார்.

முதல் முறையாகக் களம் காண்கிறீர்கள். ஒரு மூத்த அமைச்சர் பி.டி.ஆர் இருக்காரு, அந்தத் தொகுதியில் நீங்கள் இப்போது நிற்கப்போகிறீர்கள். தொகுதியைப் பற்றி ஏதாவது புரிந்து கொண்டிருக்கிறீர்களா என்ற கேள்விக்கு:

தொகுதியைப் பற்றி எல்லாம் தெரிந்து, அதை அலசி ஆராய்ந்து... ஏற்கனவே நிறைய தடவை நான் மதுரைக்கு வந்திருக்கேன், இங்க படப்பிடிப்புக்காக வந்திருக்கேன். தூங்காநகரம் மதுரையைப் பற்றி எல்லாம் தெரிந்து, அதுல இருக்கிற பிரச்னையெல்லாம் தெரிந்து, ஒரு மக்களுக்காகட்டும் இந்த மண்ணுக்காகட்டும் நல்ல தீர்வு கொடுக்க என்னால முடிந்த அளவுக்கு நல்ல தீர்வு கொடுக்கணும், அதுக்காக உழைக்கணும்னு தான் வந்திருக்கேன்

வேட்புமனு எப்போ தாக்கல் செய்யப்போறீங்க:

நாலாம் தேதி 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் பண்றோம். கேம்பெயின் (Campaign) இம்மீடியட்டா ஆரம்பிக்கிறோம். இன்னைக்கு வந்து முக்கியமான வி.ஐ.பி-களை (VIPs) மீட் பண்ண வேண்டியது இருக்கு. கட்சித் தலைவர்கள், தோழமைக் கட்சித் தலைவர்கள் எல்லாத்தையும் சந்திக்கிறோம். அவங்களோட ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுட்டு நாலாம் தேதியிலிருந்து பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறோம்.

மதுரை மத்திய தொகுதிங்கிறது திமுக-வோட பலம் வாய்ந்த ஒரு தொகுதி. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நிக்கிறாரு, போட்டி கொஞ்சம் கடினமாத் தானே இருக்கும் பற்றிய கேள்விக்கு:

போட்டி எல்லா இடத்திலயும் கடினமாத் தான் இருக்கும். போட்டின்னு பார்த்தா நாம வந்து ஒதுங்கிப் போக முடியாது. ஜெயிக்கிறதுக்குத் தான் போராடுறோம். கண்டிப்பாக ஜெயிப்போம்ங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. கண்டிப்பாக ஜெயிப்போம் என கூறினார்.

தலைப்பு செய்திகள்

​
​"எந்த 'ஜி' வந்தாலும் மகாத்மா காந்திக்கு நிகராக முடியாது!" - காஞ்சியில் வெடித்த CPI வீரபாண்டியன்!
முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளைப் பரோலில் விடுதலை செய்ய எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!
முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளைப் பரோலில் விடுதலை செய்ய எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!
Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
உதயசூரியன் சின்னம்... மதிமுக கொடி... சீர்காழி எம்.எல்.ஏ செந்தில்செல்வனின் 'ட்விஸ்ட்' அரசியல் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
உதயசூரியன் சின்னம்... மதிமுக கொடி... சீர்காழி எம்.எல்.ஏ செந்தில்செல்வனின் 'ட்விஸ்ட்' அரசியல் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இடி, மின்னலுடன் கனமழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் கனமழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Vs TVK Govt.: “கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
“கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது“: பொளந்து கட்டிய உதயநிதி
Exclusive : ‘அரசு வழக்கறிஞர்களின் பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
‘பட்டியலை அனுப்பிய காங்கிரஸ்’ அதிர்ச்சியில் தவெக அரசு..!
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
சோஷியல் மீடியா மூலம் ஆட்சியையே மாத்தினீங்க; மேகதாது அணைக்கும் குரல் கொடுங்க- இளைஞர்களுக்கு அன்புமணி அழைப்பு!
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Samsung Galaxy S25 Ultra Discount: சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா உங்க கனவு போனா.? ரூ.45,000 கம்மியா கிடைக்கப்போகுது.. அள்ளிடுங்க.!
Embed widget