மேலும் அறிய

DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை

DMK vs BJP :காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ள திமுக, இந்தியா கூட்டணி கட்சி கூட்டத்தை புறக்கணித்து வருகிறது. எனவே நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை திமுக எடுக்கும் என தகவல் வெளியான நிலையில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

திமுகவிற்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனாலும் தேர்தலுக்கு முன்னதாக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் திமுக- காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே கூட்டணி உடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 28 தொகுதிகளுக்கு காங்கிரஸ் ஒப்புக்கொண்டு கூட்டணி அமைத்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியை தழுவியது. அதே நேரம் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் மற்ற கட்சிகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், முதல் ஆளாக திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் தவெகிற்கு பல்டி அடித்தது. இதனால் திமுக தலைமை காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் உள்ளது.

காங்கிரஸ் மீது அதிருப்தியில் திமுக

எனவே இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறிவிடும் என தகவல் வெளியானது. இதற்கு ஏற்ப திமுகவும் கடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் கூட்டத்தில் திமுக இருக்காது என உறுதியாக தெரிவித்தது. இந்த நிலையில் தான் மத்திய பாஜக அரசு மீண்டும் தொகுதி மறுவரை மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது. எனவே காங்கிரஸ் கட்சி மீது கடும் அதிருப்தியில் உள்ள திமுக பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. 

பாஜகவிற்கு திமுக ஆதரவா.?

பாராளுமன்ற மழைக்கால கூட்டம் வரும் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் தொகுதி மறுவரை தொடர்பான 131 வது அரசியல் சாசன திருத்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையையும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த மசோதாவானது பெண்களுக்கு 33 சதவிகிதி இட ஒதுக்கீட்டிற்கானது என கூறப்பட்டாலும், இதில் முக்கிய மையமாக இருப்பது தொகுதி மறுவரை தான். எனவே திமுகவை ஆதரவை பெற பாஜகவும் திட்டமிட்டு திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த பரபர்பான நிலையில் தான் பாராளுமன்றத்தில் திமுகவின் நிலைப்பாடு தொடர்பாக அக்கட்சி தலைவர் ஸ்டாலின், திமுக எம்பிக்களோடு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.   

மாநில உரிமை விட்டுக்கொடுக்க மாட்டோம்- ஸ்டாலின்

இதனை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்த கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும்ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும். தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு DMK MP-யும் செயல்படுவார்கள்! என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget