இபிஎஸ், ஓபிஎஸ் இடையேயான பிரிவு அண்ணன் - தம்பி பிரிவு போல தான் - செல்லூர் ராஜூ
அதிமுகவிலிருந்து ஒரு தொண்டன் கூட இருந்து பிரிந்து செல்ல கூடாது எனவும், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., இடையேயான பிரிவு அண்ணன் - தம்பி பிரிவு போல தான் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்

மதுரை சிக்கந்தர் சாவடி, கோவில்பாப்பாகுடி பகுதிகளில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பள்ளி கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை செய்யும் நிகழ்வில் பங்கேற்ற பின்னர் அதிமுக எம்.எல்.ஏ.வும், அமைப்பு செயலாளருமான செல்லூர் கே.ராஜூ..,” தேர்தல் நேரத்தில் இந்து மதத்தை நேசிப்பது போல தி.மு.க.,வினர் செயல்படுவார்கள். தர்மபுரி எம்.பி. பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளரை பொது இடத்தில் எம்.பி., இங்கிதம் இல்லாமல் திட்டி உள்ளார். ஒன்றரை ஆண்டுகளில் சிறுபான்மை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஒட்டு வாங்க மட்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தற்போது, மதுரையில் ஆன்மீக சுற்றுலா என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் வேலையை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., இடையேயான பிரிவு அண்ணன் - தம்பி பிரிவு போல தான் என்றும் என @SellurKRajuoffl தெரிவித்துள்ளார்.#madurai | #admk | @EPSTamilNadu | @OfficeOfOPS pic.twitter.com/RAAGYMBz8n
— Arunchinna (@iamarunchinna) July 22, 2022


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















