Seeman vs Vijay: விஜயை ஒருமையில் திட்டிய சீமான்... புகார் அளித்த தவெக! நடவடிக்கை பாயுமா?
Seeman vs Vijay:நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையிலான தவெகவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Seeman vs Vijay: தவெக தலைவர் விஜயை தொடர்ந்து மரியாதை குறைவாகவும், இரு கட்சியினரிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையிலான தவெகவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஒருமையில் பேசிய சீமான்:
தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, “என்னோட தம்பி இத்தனை கோடி வருமானத்தை விட்டுட்டு வருகிறார். அவரை நான் மனதார வாழ்த்தி வரவேற்கிறேன்” என்று சொன்ன சீமான், விஜய் கட்சி தொடங்கி தந்தை பெரியாரை கொள்கை தலைவராகவும், திராவிடம் மற்றும் தமிழ் தேசியத்தை தவெகவின் இரு கண்கள் என்றும் அறிவித்தவுடன், “ஏய், தம்பி..இங்க பாரு! ஒன்னு ரோட்டுக்கு இந்த பக்கம் நில்லு! இல்ல அந்த பக்கம் நில்லு. நடுவுல நின்னா லாரியில அடிபட்டு செத்துப்போய்டுவ தம்பி!”என்று விஜய்க்கு சாபமிட்டார். பின்னர், தொடர்ந்து தான் கலந்து கொள்ளும் எல்லா மேடைகளிலும் விஜயை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
”அணில் ஏன் அங்கிள் அங்கிள் என்று கத்துது ஜங்கில் ஜங்கிள் என்று தான கத்த வேண்டும்”என்றும் விஜயை தாக்கி பேசினார். ஆனால், விஜய் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், 2026 தேர்தலில் போட்டி தவெக - திமுகவிற்கு இடையே தான் என்று கூறிவருகிறார். இச்சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சீமான், “ நான் என்னுடைய உச்சத்தை விட்டு விட்டு...அவ்வளவு வருமனத்தை விட்டுவிட்டு.. டே வானு உன் வீட்டு வாசல்ல எவன் டா நின்னா? உன் வீட்டு வாட்சுமேன் கூட நிக்கலயேடா! ஏன் டா இந்த மாதிறி பேசிட்டு அலையிற.”என்று ஒருமையில் பேசினர் சீமான்.
சீமான் மீது தவெகவினர் புகார்:
இந்த நிலையில் தான் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையிலான தவெகவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதாவது, “கோவை டவுன்ஹால் பகுதியில் கடந்த 14 ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசும்போது தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயை மரியாதை குறைவாக பேசியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் வழியில் அமைதியுடன் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கில் தவெவினர் செயல்பட்டு வரும் நிலையில் சீமான் விஜயை தொடர்ந்து அவமரியாதையாக பேசிவருவது தங்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. இவ்வாறு தொடர்ந்து பேசிவந்தால் இரு கட்சியினரிடையே கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இரு கட்சியினரிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும், விஜயை தரைக்குறைவாக பேசும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த புகாரில் கூறியுள்ளனர்.




















