Sattai Duraimurugan: பாஜகவில் இணையும் சாட்டை? சீமானுக்கு டாடா! அதிர்ச்சியில் நாதகவினர்!
சாட்டை துரைமுருகனை சீமான் தொடர்பு கொண்டு, உன்னுடைய யூடியூப் சேனலை கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்து, அதைவிட்டுவிட்டு உன்னுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கு பயன்படுத்தாதே என்றும் சொன்னதாக தகவல் வெளியானது.

சாட்டை துரைமுருகனின் செயல்பாடுகளால் கோபமான நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்கு போன் போட்டு கடுமையாக திட்டியதாகவும் அதனால் அப்செட்டான சாட்டை துரைமுருகன் விரைவில் பாஜக-வில் இணைய உள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல் நாகவில் பரபரப்பை கிளப்பியுள்ளது
சாட்டை துரைமுருகன்:
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும், சீமானுக்கு மிகவும் நெருக்கமாகவும் இருப்பவர் சாட்டை துரைமுருகன். கிட்டத்தட்ட சீமானுக்கு அடுத்த இடத்தில் இவர் தான் சில முக்கிய முடிவுகளை எடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவர் ‘சாட்டை’ என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இவர் மற்ற கட்சிக்களுக்கு எதிராக பல அதிரடியான கருத்துக்களை பேசி வரும் நிலையில் இவர் கட்சி சார்பாகவும், கட்சி மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் தனது யூடியூப் சேனல் மூலம் பதிலடியும் கொடுத்து வருகிறார். இவரது வீடியோக்கள் எல்லாம் மில்லியன் கணக்கான பார்வையார்களையும் பெற்று வருகிறது.
சாட்டையை கடிந்த சீமான்:
இச்சூழலில் தான் சாட்டை துரைமுருகனை சீமான் தொடர்பு கொண்டு, உன்னுடைய யூடியூப் சேனலை கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்து, அதைவிட்டுவிட்டு உன்னுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கு பயன்படுத்தாதே என்றும் சொன்னதாக தகவல் வெளியானது. அதேபோல், நித்யானத்தா தொடர்பாக சாட்டை யூடியூப் சேனலில் வீடியோன் வெளியிட்டது, பாஜக புதிய தலைவர் நயினார் நாகேந்திரனை சீமான் ஏன் மாமா என்று சொல்லி வாழ்த்து சொன்னார் என்பதற்கான விளக்கத்தையும் சொல்லி இருந்தார் சாட்டை துரைமுருகன். சாட்டை துரைமுருகனின் இந்த செயல்பாடுகளால் சீமான் கடும் கோபமானதாகவும் கட்சியின் முக்கிய விவகாரங்களை எல்லம் பொதுவெளியில் பேசக்கூடது என்று சீமான் கடிந்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இருவரிடையே இது வாக்குவாதமாக மாறியதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ”சாட்டை துரைமுருகன் நடத்தும் யூ டியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் தனிப்பட்டக் கருத்தாகும்” என்ற கூறப்பட்டிருந்தது.
சாட்டை விலகல்?
இதனைத்தொடர்ந்து சாட்டை துரைமுருகன் சீமானுடன் இருக்கும் முகப்படத்தை நீக்கியதோடு நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் என்ற BIO - வையும் நீக்கியுள்ளா அவர் சீமானையும் எக்ஸ் பக்கத்தில் பின் தொடர்வதை நிறுத்தியுள்ளாஎ. அதோடு, புதிய முகப்பு படமாக விடுதலை ஆவது போன்ற ஒரு புகைப்படத்தையும் வைத்துள்ளார். இதனால் சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறுகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
பாஜகவில் இணைகிறாரா?
சாட்டை துரைமுருகன் பாஜகவில் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், பின்னணியில் நயினார் நாகேந்திரன் இருப்பதாகவும் இருவரும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சட்டை துரைமுருகன் பாஜகவில் இணைய ரெடியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

