நடிகை ஜனனிக்கு திருமணம்! காதலர் யார் தெரியுமா?
சென்னையில் பிறந்து வளர்ந்த ஜனனி, ஆஸ்திரேலியாவில் படித்து கொண்டிருந்த போது, தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. அப்படியே அவரது நடிப்பு பயணம் தொடங்கியது.
ஜனனி,பாலாவின் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ‘
2013-ல் வெளியான தெகிடி திரைப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
நடிகை ஜனனி, சாய் ரோஷன் ஷ்யாம் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்தம் புகைப்படங்களை வெளியிட்டு அவர் இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
இருவரும், கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங் செய்தனர் என்றும் சொல்லப்படுகிறது.
பிங்க் நிற சேலையில் ஜனனியும், ஷெர்வானியில் சாய் ரோஷனும் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகியது. பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ஜனனி - சாய் ரோஷன் ஷ்யாம் மோதிரம் மாற்றிக்கொண்ட தருணம்..
ஜனனி - சாய் ரோஷன் திருமணம் குடும்பத்தினர், நண்பர்கள் மட்டும் பங்கேற்கும் ப்ரைவேட் திருமணமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
மணமக்களுக்கு வாழ்த்துகள். இனிய பயணம் தொடரட்டும்.