மேலும் அறிய
ஆளுநரின் செயல்பாட்டை பற்றி பெரிய தலைவர்களிடம் கேளுங்க - நைசாக நழுவிய எ.வ.வேலு
தமிழகம் சாலைப் பாதுகாப்பில் முன்னோடி மாநிலமாக இருப்பதால் கடந்த ஓராண்டில் 15 சதவீதம் சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

ஆய்வு பணியில் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நாகை எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்
நாகப்பட்டினம் அடுத்த ஒரத்தூரில் புதிய தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவ கல்லூரியில் அடிப்படை கட்டமைப்புகள், வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்களை ஆய்வு செய்த அவர், மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது தமிழக மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவரும் நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கௌதமன், தட்கோ தலைவர் மதிவாணன், நாகை நாடளுமன்ற உறுப்பினர் செல்வராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை.மாலி, ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முழுமையாக மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்து அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தமிழகம் சாலைப் பாதுகாப்பில் முன்னோடி மாநிலமாக இருப்பதால் கடந்த ஓராண்டில் 15 சதவீதம் சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் கடந்த ஆட்சிக்காலத்தில் 110 விதியின் கீழ் 360 கோடி ரூபாயில் நாகப்பட்டினத்தில் பசுமை துறைமுகம் அமைக்கப்படும் என கூறி இதுவரை செயல்படுத்தாது குறித்த கேள்விக்கு, மக்களுக்கு எது தேவையோ அதை பார்த்து பார்த்து செய்யக்கூடிய மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனவும், எனவே கடந்த ஆட்சியில் அறிவித்து கிடப்பில் போடப்பட்ட நாகப்பட்டினம் பசுமை துறைமுகம் அமைப்பது அல்லது விரிவுபடுத்துதல் குறித்து முறையாக ஆய்வு செய்து அதனை நடைமுறைப் படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் மகாபலிபுரம்- புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை திட்டம் ரத்து என்ற செய்தி தவறானது எனவும், சாலை அமைக்கத் தேவையான இடங்களை கையகப்படுத்தி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு டெண்டர் பணிகளும் நிறைவு பெற்று பணிகள் தொடங்க உள்ள நிலையில் இதுபோன்ற செய்தி தவறானது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.மேலும் தமிழக ஆளுநரின் செயற்பாடு குறித்த கேள்விக்கு பெரிய தலைவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி என நைசாக நழுவி சென்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement