கட்டு கட்டாக ஆவணங்களை வாகனத்தில் ஏற்றிய ஓபிஎஸ்! பொதுக்குழுவுக்கு நடுவே நடந்த பரபர சம்பவம்!
ஈபிஎஸ்க்கு பதவி , ஓபிஎஸ்-ன் பதவி பறிப்பு என பொதுக்குழு நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் தான் வந்த வாகனத்தில் ஆவணங்கள் அனைத்தையும் அதிமுக அலுவலகத்தில் இருந்து ஏற்றியுள்ளது ஓபிஎஸ் தரப்பு
சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ்-ஐ தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத்தலைமையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
துணைப் பொதுச்செயலாளர் பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே அதிமுக அலுவலகத்துச் சென்றார் ஓபிஎஸ். ஒருபக்கம் ஈபிஎஸ்க்கு பதவி , ஓபிஎஸ்-ன் பதவி பறிப்பு என பொதுக்குழு நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் தான் வந்த வாகனத்தில் ஆவணங்கள் அனைத்தையும் அதிமுக அலுவலகத்தில் இருந்து ஏற்றியுள்ளது ஓபிஎஸ் தரப்பு.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஏற்கெனவே ஓபிஎஸ் இருந்த நிலையில் அவர் எடுத்துச்சென்ற ஆவணங்கள் முக்கியகோப்புகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே சிறப்புத்தீர்மானத்தை கொண்டு வந்து ஓபிஎஸ் அதிமுகவில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.