’’மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் ஸ்டாலின் முடிச்சு போடுகிறார்’’- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
’’அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் நானும் நாளை வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்’’
சேலம் மாவட்டத்தில் கொங்கணாபுரம் ஒன்றியத்திலுள்ள வெள்ளாளபுரம் ஏரி நிரம்பி அருந்ததியர் காலனியில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளில் தண்ணீர் புகுந்தது பாதுகாப்பு கருதி அனைவரையும் வெள்ளாளபுரம் அரசு துவக்கப்பள்ளியில் முகாமிட்டு தங்க வைத்தனர். இதனையடுத்து இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு 160 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கினார். இதை தொடர்ந்து வெள்ளாளபுரம் ஏரியை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
’’ஒரு டாஸ்மாக் கடையை மூடுவதால் அரசுக்கு ஒன்றும் இழப்பில்லை’’- உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பு
இதனிடையே அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், திமுக அரசு பருவமழைக்கு முன்னரே நீர் நிலைகளை தூர்வார சரியான திட்டமிடாததால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர். நாளைய தினம் நானும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் டெல்டா பகுதிகளை பார்வையிட உள்ளோம். விவசாய நிலங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறுவதற்காக செல்ல உள்ளதாக கூறினார். வெள்ளம் பாதிப்பு குறித்து மாநில அரசு மத்திய அரசிடம் கேட்டால் நாங்களும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றார்.
தனிநபர் வீட்டிற்கு முன் சோதனைச்சாவடி கட்ட தடை - நெல்லை ஆட்சியர், எஸ்.பி பதில்தர உத்தரவு
வெள்ளம் பாதித்த கன்னியாகுமரியில் நிவாரண உதவிகளை வழங்கி முதல்வர் ஆய்வு
ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், மேட்டூர் அணை சரபங்கா ஆற்றங்கரையில் உள்ள 100 ஏரி நிரப்பும் திட்டம் 60 சதவீதம் முடிந்த நிலையில், திமுக அரசு அதனை மெத்தனமாக செய்து வருகிறது. அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தியதால்தான் அதிகமான தண்ணீர் சேமிக்கப்படுகிறது எனவும் கூறினார்.
அதிமுக ஊழல்களை கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், வெள்ள நீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு கூறினால், மறுப்பு தெரிவிக்க திராணி இல்லாத ஸ்டாலின், மிரட்டுகிறார். மொட்ட தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் விசாரணை கமிஷன் என்று கூறுகிறார். அதிமுக ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக செயல்படும் என்றார். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அதிகமான திட்டத்தை தந்ததால்தான், அதனை திமுக அரசு தற்போது திறந்து வைத்து வருகிறது. திமுக அரசு புதிய திட்டங்கள் ஏதும் தரவில்லை என்றும் கூறினார்.
டெல்லி தகவலை கில்லியாக கேட்ச் செய்த போலீஸ்..! - ராமநாதபுரம் ஏடிஎமில் தப்பிய 40 லட்சம்...!