Velmurugan:"எத்தனை சீட்டுகள் கொடுத்தாலும் பாஜக கூட்டணியில் சேர மாட்டோம்" - வேல்முருகன்
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக முதலில் எங்களுடன் இணைந்து சிறிது காலம் பயணிக்கட்டும் அதன் பிறகு அதிமுகவுடனான கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், "கட்சியின் வளர்ச்சிகள் குறித்து கட்டமைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் ஒரு நாடாளுமன்ற தொகுதியை ஒதுக்கி தர வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். விரைவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்த கோரிக்கை சம்பந்தமாக பேசப்படும்.
ஜனவரி மாதம் அல்லது பிப்ரவரி மாதத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்றிய அரசை எதிர்பார்க்காமல் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்தது போல சாதி வாரிகணக்கீடை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
கடலூரில் இயங்கி வரும் சிப்காட் 50க்கும் மேற்பட்ட கெமிக்கல் நிறுவனங்களும் பல சாய தொழில் நிறுவனங்களும் இயங்கி வந்தது. இதன் தொடர்ச்சியான இயக்குதலினால் அந்த மாவட்ட மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. கடலூர் மனிதர்கள் வாழ தகுதி இல்லாத இடம் என சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளனர். பசுமைத்தாயகம், பூ உலகில் நண்பர்கள் போன்ற பகுதியில் அமைப்புகளும் இதற்கான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். நெய்வேலி, கடலூர் சிப்காட் பாதிப்பால் அங்கு வாழும் மக்கள் பல பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு பல பிரச்சனைகள் நோய் தொற்றுகள் ஏற்படுகிறது. மேலும் கழிவுகளை நேரடியாக கடலில் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிபடைகிறது. அபாயகரமான ஆலைகளை இனங்கண்டு தமிழ்நாடு அரசும், முதல்வரும் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த ஆலைகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுபோன்று என்எல்சியால் ஏற்படுகின்ற சுற்று சூழல்களை கருத்திலை கொண்டு மாவட்ட நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
"ஈரோடு, நாமக்கல், கோயமுத்தூர் போன்ற மாவட்டங்களில் சாயப்பட்டறைகளால் ஆறு பாழாப்போகிறது. சம வேலைக்கு சம ஊதியம் என்று பகுதி நேர ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று 10 ஆண்டுகளாக பணிக்காக காத்திருப்பவர்கள் ஆசிரியர் தகுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனம் இன்றி காத்திருக்கக் கூடியவர்கள். செவிலியர்கள் கொரோனா காலங்களில் தன் உயிரைப் பனையம் வைத்து பணி செய்த செவிலியர்கள். அதுபோன்று மின்வாரிய காலி பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் காலம் வரை ஊதியம் என்று பல கோரிக்கைகளை முன்வைத்து இங்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன" என்றார்.
"என்எல்சிக்கு வீடு நிலம் கொடுத்த மக்களுக்கு நிரந்தர வேலை, அடியோடு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இங்கு பல லட்சக்கணக்கான மக்கள் தாலியருக்கென்று நினைவுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் இந்த தீர்மானங்களில் இடம் பெற்றுள்ளது. பவானி, ஒமலூர் சுங்கச்சாவடி சட்டத்துக்கு புறம்பாக இயங்கி வருகிறது. அது உடனடியாக மூடப்பட வேண்டும். ஈரோடு மாவட்ட பவானி அந்தியூர் வட்டங்களை விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் மேட்டூர் அணையின் உபரி நீரை ஏறி குளம் குட்டைகளிலே நிரப்புவதற்கான விரிவான ஒரு திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கப்பட வேண்டும். கடலூர் சிப்காட்டில் இருக்கின்ற ரசாயன ஆலைகளாலும் அங்கு இருக்கின்ற துணி நூலை பயன்படுத்துவதற்கான சாயங்களை தயாரிக்கிற சாயப்பட்டறைகளின் அழிவுகளுக்கு முடிவு கட்டுகின்ற வகையில் அதை இனம் கண்டு அரசு உடனடியாக இழுத்து மூட வேண்டும் என்கிற கோரிக்கையுடனும் நியாயமாக இயங்குகின்ற மாசு ஏற்படுத்தாத நிறுவனங்கள் தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கிறார்கள் தூக்கிவிட்டு ஏற்கனவே எந்த தமிழர்கள் இருந்தார்களோ அவர்களை உடனடியாக அங்கு பணியமர்த்தப்பட வேண்டும்" என்று கூறினார்.
"தமிழக அரசுக்கும் சவால் விடுகிற இதுபோன்ற ஆலைகளை இனம் கண்டு அந்த ஆலைகளுடைய செய்கின்ற தவற்றை கண்டுபிடித்து அந்த ஆலைகளை நிரந்தரமாக இழுத்து மூடுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
அதேபோன்று, காவிரி நமது பிறப்புரிமை என்ற நோக்கில் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். மேகதாதுவில் அணைகட்ட ஒன்றிய அரசும் தமிழக அரசும் அனுமதி அளிக்கக் கூடாது. இதற்காக மக்கள் இயக்கங்களை நடத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார். தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு சீட்டும் நோட்டும் முக்கியமில்லை என்ற அவர் எத்தனை சீட்டுகள் கொடுத்தாலும் பாஜக தலைமையிலான கூட்டணியில் சேர மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் திமுக கூட்டணியில் இதர கட்சிகளை காட்டிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிலும் குறையவில்லை என்ற அவர் தேர்தலில் சீட்டு கேட்பது எங்கள் உரிமை; வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சீட்டு கேட்க உள்ளோம் என்றார். மேலும் மதச்சார்பற்ற கூட்டணியில் தற்போது வெற்றி பயணம் செய்கிறோம் என்ற அவர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக முதலில் எங்களுடன் இணைந்து சிறிது காலம் பயணிக்கட்டும் அதன் பிறகு அதிமுகவுடனான கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.