National Award: ”எங்களுக்காக படம் எடுங்க, தேசிய விருது கன்ஃபார்ம்” அள்ளிக் கொடுத்த பாஜக - படம் பார்த்தீங்களா?
National Film Award: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

National Film Award: படம் பார்த்துவிட்டு தான் தேர்வுக்குழு தேசிய விருதுகளை அறிவிக்கிறதா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தேசிய விருதுகள் அறிவிப்பு:
திரைத்துறையினரை ஊக்கப்படுத்தும் விதமாக, சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசு தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சில படங்கள் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த படங்களாக இருந்தாலும், சில படங்களுக்கான விருதுகள் உள்நோக்கத்துடன் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக தி கேரளா ஸ்டோரி மற்றும் அனிமல் போன்ற படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு இருப்பது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சர்ச்சையில் கேரளா ஸ்டோரி:
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானபோதே பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மத ரீதியான பிளவை ஏற்படுத்துவதாகவும், கட்டாய மதமாற்றம் தொடர்பான தவறான மற்றும் அதிகபட்ச சித்தரிப்பு காட்சிகள் இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. கேரளாவை சேர்ந்த அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த அதே வேளையில், பாஜகவினர் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தான், அந்த படத்திற்கு சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பாஜக தங்களது கொள்கைகளை பரப்பும் படங்களை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Selectively exaggerating certain facts to tailor a hyperbolic narrative is propaganda. ‘The Kerala Story’ was vulgar propaganda at its worst. The makers had to remove the claim of ‘32k women’ after Court’s rap. Even discounting the propaganda, it was a terribly made movie
— Manu Sebastian (@manuvichar) August 2, 2025
Bold of you to assume that the same team that awarded kashmir files and kerala story to even consider awarding this film that promotes religious harmony... https://t.co/bLCnO6hSU8
— Dharma @ Preem Bakes (@DharmaBoring) August 1, 2025
”வெறுப்பை பரப்பும் பாஜக”
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக எப்படி வெறுப்பை ஆதரிக்கிறது மற்றும் ஊக்குவிக்கிறது என்பதற்கு, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தேசிய விருதுகள் கிடைத்திருப்பதே சான்று. கேரளா தனது சொந்த நாட்டு அரசாங்கத்திடமிருந்து பெற்ற இந்த அவமானத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது” என சாடியுள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் மற்றும் வகுப்புவாத வெறுப்பு விதைகளை விதைக்கும் தெளிவான நோக்கத்துடன் அப்பட்டமான தவறான தகவல்களைப் பரப்பும் ஒரு திரைப்படத்தை கௌரவிப்பதன் மூலம், #NationalFilmAwards நடுவர் குழு , சங்பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது” என கடுமையாக சாடியுள்ளார்.
படம் பார்த்து தான் விருது அறிவிக்கிறீர்களா?
திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் என்பது தரமான படைப்புகள் மற்றும் சமூகத்திற்கு தேவையான ஒரு முன்னெடுப்பை வழங்குபவர்களுக்கு ஒரு அங்கீகாரமாகும். ஆனால், பார்ப்பதற்கு தொலைக்காட்சி சீரியல் போன்று இருந்த, தி கேரளா ஸ்டோரி படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் விருது கொடுப்பது எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது என நெட்டிசன்கள் சாடியுள்ளனர். அரசியல்வாதிகளின் உள்நோக்கத்தால், திரைத்துறையில் பல திறமையான டெக்னீஷியன்கள் தங்களுக்கான அங்கீகாரத்தை பெறமுடியாமல் தவிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுபோக, அனிமல் திரைப்படத்திற்கு விருது வழங்கியதன் மூலம், சமூகத்திற்கு அரசு என்ன சொல்ல நினைக்கிறது என சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது. வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்று இருந்தாலும், அந்த படத்தின் கதாபாத்திர சித்தரிப்புகள் மற்றும் வன்முறை காட்சிகளுகாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், அதனை மத்திய அரசு கவுரவித்துள்ளது. இதனை குறிப்பிட்டு, தேர்வுக்குழு உண்மையாகவே பரிந்துரைக்கப்பட்ட அனைத்து படங்களையும் பார்த்துவிட்டு தான் விருதுகளை வழங்குகிறதா? என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.





















