மேலும் அறிய
Advertisement
நபிகளின் பொன்மொழியை வாசித்த சசிகலா...! மயில் இறகால் ஆசி தந்த ஹாஜி - வி.கே.சசிகலாவின் நாகூர் ஆன்மீக பயணத்தில் நடந்த சுவாரசியம்
ஐந்து அறிவு ஜிவராசி கூட தன்னுடைய வாழ்வின் வெற்றிக்காக போராடும்போது மனிதர்களையாகிய நாம் எப்படிபட்ட சூழ்நிலையையும் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா தமிழகம் முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நாகூர் ஆண்டவர் தர்காவில் தர்கா ஆதீனம் ஹாசிருள் பாசித் சாஹிப் தலைமையில் நடைபெற்ற இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் வி.கே.சசிகலா கலந்து கொண்டார். அப்போது பேசிய வி.கே.சசிகலா, நபிகள் நாயகத்தின் பொன் மொழிகளை வாசித்து, அவர் வழிகாட்டுதலை பின்பற்றுபவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது நிச்சயம் என தெரிவித்தவர் சிறப்பு மிக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது என் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது.
சகோதர பாசத்தாலும் அன்பான வரவேற்பாலும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எண்ணற்ற நலத்திட்டங்களை கொடுத்துள்ளார்கள். குறிப்பாக இஸ்லாமிய பெருமக்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள நிதியுதவி, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கியது.
நாகூர் தர்காவில் சந்தன கூடு நடைபெறும் அதற்காக சந்தன கட்டைகளை வழங்கியது என்றார் மேலும் ஐந்து அறிவு ஜிவராசி கூட தன்னுடைய வாழ்வின் வெற்றிக்காக போராடும்போது மனிதர்களையாகிய நாம் எப்படிபட்ட சூழ்நிலையையும் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என பேசினார். அதனை தொடர்ந்து அப்துல் வாஹிது சாஹிப் சிறப்பு தொழுகை செய்தார். அப்போது வி.கே.சசிகலா இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்புக் கஞ்சியை பருகினார்.
இப்தார் நிகழ்ச்சியில் சசிகலாவிற்கு நாகூர் ஆண்டவர் தர்காவின் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. இதனை அடுத்து நாகூர் ஆண்டவர் சன்னிதியில் வழிபாடு நடத்திய வி.கே.சசிகலா நாகூர் ஆண்டவருக்கு மலர்ப் போர்வை வழங்கி சிறப்பு துவா செய்தார். அதனை தொடர்ந்து நாகூர் தர்கா ஆதீனம் ஹாஜி அப்துல் ஹை சாஹிப் வி.கே.சசிகலாவிற்கு மயில் இறகால் ஆசிர்வாதம் செய்தார். நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion