மேலும் அறிய
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு
துறைமுகம் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

seeman
நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. சென்னையில் உள்ள துறைமுகம் தொகுதியின் நாம் தமிழர் வேட்பாளராக முகமது கடாபி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முகம்மது கடாபி 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்டதற்கான செலவுக்கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி, அவரது வேட்புமனுவை நிராகரிப்பதாக அதிகாரிகள் இன்று அறிவித்தனர். இது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், அக்கட்சியின் மாற்று வேட்பாளர் விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















