மேலும் அறிய

“என் மக்களுக்கு சோறு இல்லை....” - ராஜராஜ சோழன் சர்ச்சை தேவையா என அன்புமணி காட்டம்

ராஜராஜ சோழன் சர்ச்சை குறித்த கேள்விக்கு, என் மக்களுக்கு சோறு இல்லை, வேலைவாய்ப்பு இல்லை இந்த நிலையில் ராஜராஜ சோழன் சர்ச்சை தற்போது தேவையா என அன்புமணி காட்டமாக பேசினார்.

திண்டிவனம் அருகே கொல்லியங்குணம் கிராமத்தில் உள்ள மாந்தோப்பு ஒன்றில் இன்று ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட பாமக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம்  மயிலம் எம்எல்ஏ சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவத்தலைவர் ஜிகே மணி, அரசியல் ஆலோசனைக் குழுத்தலைவர் பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது, பாமக நிர்வாகிகள் செல்போன் அரசியலை கைவிட்டு களப்பணியாற்றவேண்டும். வரும் நாட்களில் நான் தொகுதிவாரியாக  ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்ல  உள்ளேன். அப்போது நான் செல்லும் கிராமங்களில் பாமக கிளை இல்லாவிட்டால் சம்மந்தப்பட்ட ஒன்றிய செயலாளர் உள்ளிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி கூறியதாவது:-

ராஜராஜ சோழன் சர்ச்சை குறித்த கேள்விக்கு, என் மக்களுக்கு சோறு இல்லையா, வேலைவாய்ப்பு இல்லை இந்த நிலையில் ராஜராஜ சோழன் சர்ச்சை தற்போது தேவையா என அன்புமணி காட்டம் பேசினார்.

பின் தங்கிய விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல்வர் தனிக்கவனம் செலுத்தவேண்டும். காலநிலை அவசர நிலை பிரகடனத்தை முதல்வர் அறிவிக்கவேண்டும். 100 ஆண்டுகளில் அதிகமான வெப்பம் கடந்த ஆண்டு என்றார்கள். அதனை இந்தாண்டு வெப்பம் முறியடித்தது. பெங்களூர், பாகிஸ்தானின் கடும் வெள்ளம். சீனா, ஐரோப்பாவில் கடும் வறட்சி. இந்த காலநிலை மாற்றத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.  குறிப்பிட்ட காலத்திற்குள் இயற்கையை நாம் மீட்டெடுக்கவேண்டும். காலதாமதப்படுத்தினால் மீட்க முடியாது.  

இந்தி மொழி திணிப்பு குறித்து  நான்தான் முதலில் அறிக்கைவிட்டேன். மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில், இந்தி கட்டாயமாக படிக்க வேண்டும் என்று நேற்று உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற நிலைக்குழு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது. இது அபத்தமானது, ஆபத்தானது. இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கும். நேரு பிரதமராக இருந்த காலத்தில், நமக்கெல்லாம் உறுதியளித்தார். 1965-ல் ஒரு சட்டம் வந்தது. இந்தி பேசாத மாநிலங்களில், அவர்கள் விருப்பபடாமல், இந்தியை நாங்கள் திணிக்க மாட்டோம் என்று உறுதியளித்தார். காரணம் அப்போது மிகப்பெரிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் எல்லாம் நடைபெற்றது.

இடைப்பட்ட காலத்தில் அமைதியாக போய்க்கொண்டிருக்கிறது. தற்போதுள்ள பாஜக ஆட்சி வேண்டுமென்றே, இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை திணிப்பதை ஒரு துளியும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதனை கடுமையாக எதிர்ப்போம். இந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்று ஒரு வேண்டுகோள் விடுத்தால், குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள். கட்டாயம் இந்தியை படித்தே ஆகவேண்டும் என்று திணித்தால், கடுமையாக எதிர்ப்போம்.

இந்தியாவில் தேசிய மொழி என்பது எதுவும் கிடையாது. அலுவல் மொழிதான் இருக்கிறது. அதில் 8-வது அட்டவணையில் 22 மொழிகள் உள்ளன. அவையெல்லாமே அலுவல் மொழிதான். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு,  மராட்டி, போல இந்தியும் ஒரு அலுவல் மொழிதான். இணைப்பு மொழி ஆங்கிலம். தற்போது இந்த நிலைக்குழு, இணைப்பு மொழி ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை திணிக்க பார்க்கிறது. இதை ஏற்றுக்கொள்ளமாட்டோம், கடந்த காலங்களைவிட மிக கடுமையான போராட்டம் நடக்கும்.

எல்லா மாநிலங்களுக்கும் தனி அடையாளங்கள் உள்ளன.அதில் முதன்மை அடையாளம் மொழி. அந்த முதன்மை அடையாளத்தையே அழித்துவிட்டு, உங்கள் அடையாளத்தை திணிக்கப் பார்க்கிறீர்கள்.அதை நிச்சயமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். கடலூர் மாவட்டத்தில் ஒன்றுமில்லாத விஷயத்துக்கு எல்லாம் வன்கொடுமை தடை சட்டம் மூலம் வழக்கு  பதிவு செய்யப்படுகிறது.

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 50 சதவீதம்கூட முடிக்கபடவில்லை. தமிழகத்தில் வடிகால் மாவட்டம் கடலூர். இங்குள்ள  நீர் நிலைகளை தூர்வாரவேண்டும். வெள்ளத்தை வரும் காலத்தில் வரமாக பார்க்கவேண்டும்.  புதிய நீர் நிலைகளை உருவாக்கவேண்டும்.  வாடகைத்தாய் என்பது உலக அளவில் நடைபெறுகிறது. குழந்தை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்களை போக்க வாடகைதாய்  முறையை அரசு அங்கிகரித்துள்ளது.  2026 இல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான தமிழகத்தில் ஆட்சி இருக்கும் அதற்காக 2024 இல் வெற்றிக்கான வியூகங்களை அமைப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget