Ilayaraja Absent : முதல்நாளே ஆப்சென்ட்..! பதவியேற்பு விழாவுக்கு கூட போகாத இளையராஜா..! குடியரசுத்துணைத்தலைவர் ஏமாற்றம்..!
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நியமன எம்.பி.யாக தேர்வாகியுள்ள இளையராஜா பங்கேற்கவில்லை.
டெல்லியில் இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூட்டப்பட்டது. முதல் நாளான இன்று மாநிலங்களவையில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட நியமன எம்.பி.க்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாநிலங்களவையின் சபாநாயகரான குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு இசையமைப்பாளர் இளையராஜாவை பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்காக அழைத்தார். அவர் பெயரைச் சொன்னதும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
ஆனால், அவர் இன்றைய பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை. அவர் பதவியேற்பு விழா நிகழ்வில் பங்கேற்காததால் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு சற்று ஏமாற்றம் அடைந்தார். பின்னர், மற்ற உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்யப்பட்டது.
மேலும் படிக்க : Annamalai: நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? - அண்ணாமலை காட்டம்
கடந்த 6-ந் தேதி பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவையின் நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். அவர் மட்டுமின்றி பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷா, பிரபல இயக்குனர் ராஜமவுலியின் தந்தையும், திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிசாத், கர்நாடகாவைச் சேர்ந்த வீரேந்திர ஹெக்டே ஆகியோரும் நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த சூழலில், அவர்கள் அனைவருக்குமான பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. அமெரிக்காவில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இளையராஜா அங்கு சென்றுவிட்டதால், அவரால் இன்றைய பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்னும் சில நாட்கள் நடைபெறும் என்பதால் இளையராஜா விரைவில் நியமன எம்.பி.யாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய திரையுலகின் இசை ஜாம்பவனாகிய இளையராஜா நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அவர் இந்தியாவின் சட்டத்தை இயற்றிய அம்பேத்கரை, பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இளையராஜாவிற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Presidential Elections 2022 : குடியரசுத்தலைவர் தேர்தல் நிறைவு: தேர்தலில் இடம்பெற்ற 10 முக்கிய தகவல்கள்
மேலும் படிக்க : Vice President Candidate: குடியரசு துணை தலைவருக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்