DMK : தி.மு.க.விற்கு மீண்டும் தலைவரானார் மு.க.ஸ்டாலின்..! துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமனம்..! தொண்டர்கள் உற்சாகம்
பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக போட்டியின்றி முதலமைச்சர் முக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை, அமைந்தகரையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக போட்டியின்றி முதலமைச்சர் முக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு காக்கும், தமிழ் இனம் காக்கும், தமிழ் மொழி காக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைத் தலைமை, இரண்டாவது முறையாக கழகத்தின் பொறுப்பை ஏற்றார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் 🔥🔥🔥#ThalaivarMKStalin @mkstalin pic.twitter.com/SWZN2oXMhu
— Karthik Mohan (@Karthikmohandmk) October 9, 2022
View this post on Instagram
பொதுக்குழு கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் முக ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கட்சியின் தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார்.
அதன்பிறகு பேசிய மு.க ஸ்டாலின், தமிழர்களின் சுய மரியாதையையும் , தமிழ் நாட்டின் நலனையும் காக்கின்ற திமுகவின் தலைவராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளேன். உங்களின் ஒருவனான தலைவனாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளேன்..தொண்டர்களுக்கு நன்றி
திமுக தோன்றிய காலத்தில் எத்தனைய உணர்சியும் சுறுசுறப்பும் இருந்ததோ அப்படியே இயங்கி வருகிறோம். திமுக வின் பொதுகுழு உறுப்பினர்களால் 2 வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளேன்” என்றார்.
திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர். பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல், தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து திமுக துணைப்பொதுச்செயலாளராக திண்டுக்கல் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், திமுக தலைமை நிலைய முதன்மை செயலாளராக அமைச்சர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
DMK general council meeting | Party leaders Durai Murugan and T.R.Balu elected as general secretary and treasurer of the party respectively#Chennai pic.twitter.com/Fk2GkpVt9S
— ANI (@ANI) October 9, 2022
திமுக தணிக்கைக்குழு உறுப்பினர்கள் தேர்வு :
திமுகவின் தணிக்கைக்குழு உறுப்பினர்களாக முகமது சகி, கு.பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.