மேலும் அறிய
Advertisement
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Sengottaiyan: "நான் செல்வது நேர்வழி தொண்டர்கள் செல்லும் பாதையில் நான் தூணாக நிற்பேன்" முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அமைச்சர் ரகுபதிக்கு பதில்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும் என காஞ்சிபுரத்தில் செங்கோட்டையன், அமைச்சர் ரகுபதியின் கேள்விக்கு பதிலளித்தார்.
தண்ணீர் பந்தல்
தமிழர் பாரம்பரியத்தில் தண்ணீர் பந்தல் அமைப்பது என்பது முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. கோடை காலங்களில் தமிழ்நாட்டில் இருக்கும் பிரதான அரசியல் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைப்பது இலவச நீர்மோர் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள். இந்த தண்ணீர் பந்தல் அமைப்பது தமிழக அரசியல் கட்சியினர் நீண்ட காலமாகவே செய்து வருகின்றனர். இந்த ஆண்டும் பிரதான கட்சிகளாக இருக்கக்கூடிய திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரத்திலிருந்து இன்று அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ( Sengottaiyan )
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் தமிழக முழுவதும் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கடந்த 10 தினங்களாகவே நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எம்ஜிஆர் மன்ற செயலாளர் காஞ்சி பன்னீர் செல்வம் ஏற்பாட்டின் பேரில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து பொது மக்களுக்கு பழங்கள் குளிர்பானங்கள் பழகினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் , அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதன்பின் செய்தியாளிடம் பேசிய செங்கோட்டையன், அமைச்சர் ரகுபதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக பிளவுபடும் என கூறிய கருத்துக்கு பதில் அளித்த செங்கோட்டையன், முன்னாள் முதல்வரும் தற்போதைய பொதுச் செயலாளர் ஆன எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இயங்கும் எனவும் எந்த சலசலப்பு பிளவுக்கும் இடமில்லை என தெரிவித்தார்.
"நான் செல்வது நேர்வழி தொண்டர்கள் செல்லும் பாதையில் நான் தூணாக நிற்பேன்" முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் - அமைச்சர் ரகுபதிக்கு பதில்
45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நான் நேர்வழியில் சென்று கொண்டிருக்கிறேன் , இது மாற்றுக் கட்சியை சார்ந்தவர்களுக்கும் தெரியும். நேற்றைய தினம் சட்ட அமைச்சர் என்னை குறித்து கூறிய கருத்து வருத்தத்தக்க ஒன்று. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என தெரிந்து புரிந்து இது போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். இதுதான் அவரைப் போன்ற அரசியல்வாதிக்கு உயர்வாக இருந்திருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை மற்றவரை கூட அரசியல் வாழ்க்கையில் குறை கூறாமல் என் வாழ்க்கை பயணத்தில் நேர்வழியில் சென்று கொண்டிருக்கிறேன். இந்த இயக்கத்திற்கு எப்பொழுது சோதனை வரும் பொழுது, இந்த தொண்டர்களுக்கு என்றைக்குமே நான் தூணாக நின்று செயலாற்று இருக்கிறேன் என தெளிவுபடுத்துகிறேன்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த பொழுது அமைச்சர் ரகுபதி , தேர்தலுக்குப் பிறகு அதிமுக பிளவுபடும் அது செங்கோட்டையின் தலைமையிலா அல்லது வேலுமணி தலைமையில் என தெரியவரும் என விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதில் அளித்து இன்று காஞ்சிபுரத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion