மேலும் அறிய

Minister Ponmudi : கிராமசபை கூட்டத்தில் பாதியிலே வெளியேறிய அமைச்சர் பொன்முடி..! ஏன் தெரியுமா...?

விழுப்புரத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் இருந்து அமைச்சர் பொன்முடி பாதியிலே வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்காவுக்கு உட்பட்டது வீரபாண்டி கிராமம். இந்த கிராமத்தில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்றைய கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் க.பொன்முடி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  அவருடன் ஊரக வளர்ச்சி துறை நிர்வாக துறை அமைச்சர் உள்ளிட்ட ஏராளமான அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பொதுமக்களின் குறைகளை அமைச்சர் கேட்கும் போது, முன் வரிசையில் அமர்ந்திருந்த வீரபாண்டி கிராமத்தின் ஒன்றிய கவுன்சிலர் ரேவதி என்பவர் தான் ஒரு அ.தி.மு.க. கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளேன். அதனால் எனக்கும் இந்த ஊராட்சிக்கும் சம்பந்தம் இருக்கா? இல்லையா? எனவும், ஊராட்சி மன்ற தலைவர் கிராமத்தில் நடைபெறும் பணிகள் குறித்து தன்னிடம் எதுவும் சொல்வதில்லை என்றும், இது குறித்து பி.டி.ஓ விடம் கூறினாலும் அதற்கு முறையான பதில் கிடைப்பதில்லை என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, அவரை அமரச் சொன்ன அமைச்சர், ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய செயலாளர் உங்கள் பிரச்சனைகளை தனியாக பேசிக் கொள்ளுங்கள் என்றும், கிராம சபையில் பொதுப் பிரச்சனைகள் குறித்து மட்டுமே பேச வேண்டும் என்றும் கூறினார். மேலும், பொதுமக்களிடம் குறைகளை கேட்ட போது, கழிவு நீர் கால்வாய், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் குளறுபடிகள், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சரமாரியாக அடுக்கடுக்காக முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, உங்கள் கேள்விகளுக்கு இங்கு வந்துள்ள அரசு அலுவலர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள் எனவும், தான் அடுத்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்றும் கூறி அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கேள்வி கேட்ட பெண் கவுன்சிலரை, ''ஏய் இரு.. உட்காரு'' என்று அமைச்சர் பொன்முடி ஒருமையில் பேசியது கூடி இருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
"இதுதான்யா மனிதநேயம்" பரிதவிக்கும் பாலஸ்தீனியர்கள்.. ஓடோடி சென்று உதவிய இந்தியா!
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP Controversy Video |’’நாங்க ஆட்சிக்கு வரலனா..உங்கள சூறையாடிருவாங்க!’’பாஜக மதவெறி வீடியோGym Master Death | காதில் ரத்தம்..பாத்ரூமில் சடலம்..ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்!Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
"இதுதான்யா மனிதநேயம்" பரிதவிக்கும் பாலஸ்தீனியர்கள்.. ஓடோடி சென்று உதவிய இந்தியா!
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
Embed widget